குடிநீர் பாதுகாப்பு வார விழாவையொட்டி
பொள்ளாச்சியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழக அரசு
குடிநீர் பாதுகாப்பு வாரவிழா கொண் டாட உத்தரவிட்டுள்ளது. இந்த விழாவில்
குடிநீர் சேமிப்பு, குடிநீர் பாதுகாப்பு தரமான நிலத்தடிநீர் கண்டறி தல்,
நிலத்தடி நீர் சேகரிப்பின் அவசியம், தரமற்ற குடிநீரால் ஏற்படும் தீமைகள்
ஆகியவை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத் தப்படுகிறது.
இதையொட்டி பொள் ளாச்சி தெற்கு, வடக்கு, கிணத்
துக்கடவு, ஆனைமலை ஒன்றி யங்களை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள், குடிநீர்
பணியா ளர்கள் ஆகியோருக்கு பொள் ளாச்சி- பாலக்காடு ரோடு அரசு ஆண்கள் மேல்
நிலைப் பள்ளியில் நேற்று பயிற்சிஅளிக் கப்பட்டது.
200 ஆசிரியர்கள்
இந்த பயிற்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரியத்தால் குடிநீரை சோதனை செய்வதற் கான மாதிரி பொருட்கள் வழங்கப்பட்டன.
குடிநீரை தரம்பிரிப்பது, பரிசோதனை செய்வது குறித்த செயல்முறை விளக்கப்
பயிற்சிகள் அளிக்கப் பட்டன. பயிற்சிக்கு கிராம குடிநீர் உட்கோட்ட உதவி
நிர்வாக பொறியாளர் சதிதரன் தலைமை தாங்கி னார். இதில் உதவிப் பொறியாளர்
மதியழ கன், நீர் பகுப்பாய் வாளர்கள் மல்லிகா, பாக்யலட்சுமி, சுப்பு லட்சுமி
மற்றும் உபகோட்ட ஆய்வக நீர்பகுப்பாய்வாளர் கள் பயிற்சி அளித்தனர். பயிற்சி வகுப்பில் அரசு பள்ளிகளை சேர்ந்த 200 ஆசிரியர்கள், குடிநீர் பணியா ளர்கள் 50 பேர் உள்பட பலர் கலந்து கொண்டனர்
இது குறித்து உதவி நிர்வாக பொறியாளர் சசிதரன் கூறியதாவது:-
கொடி அறிமுகம்
தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் குடிநீர்
பாதுகாப்பு விழா நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 25-ந் தேதி வரை
கொண்டாடப்படுகிறது. இதில் முதற்கட்டமாக பொள் ளாச்சி தெற்கு, வடக்கு ஒன்றி
யங்களில் உள்ள அரசுப்பணியா ளர்கள், ஆசிரிய- ஆசிரியை களுக்கும், அந்த பகுதி
குடிநீர் பணியாளர் களுக்கும், குடிநீர் குறித்து விழிப்புணர்வு மற்றும்
பாதுகாப்பின் அவசியம், தர மான குடிநீரை கண்டறிதல் பயிற்சி அளிக்கப்பட்டு
உள்ளது.
இதையொட்டி குடிநீர் விழிப்புணர்வு கொடி அறிமு
கப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று (வியாழக் கிழமை) மாவட்ட தலை
நகரங்களில் விழிப்புணர்வு ஊர்வலமும், நாளை (வெள் ளிக்கிழமை) ஒன்றிய அளவி
லான ஊர்வலமும், 22-ந்தேதி கிராம ஊராட்சி குடிநீர்கண்ட றியும் பயிற்சி
மற்றும் குடிநீரை பாதுகாப்பது குறித்த பயறிசி யும் அளிக்கப்படுகிறது.
மேலும்பள்ளி ஆசிரியர்கள், கிராம குடிநீர்
பராமரிப்பா ளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும் பயிற்சி அளிக்கபட உள்ளது.
இதில் நீர்மாதிரி சேகரிக்கும் முறை, நீர் பரிசோ தனை செய்முறை, நீரின் தர
அறிக்கை தயாரித்தல் மற்றும் தரமற்ற குடிநீரை பயன்படுத் துவதால் ஏற்படும்
தீமைகள் மற்றும் மழைநீர், நிலத்தடிநீர் பாதுகாப்பின் அவசியம் குறித்த
விழிப்புணர்வு ஏற்ப டுத்த திட்டமிடப்பட்டுள் ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...