பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம், மாதாந்திர
கட்டணம், "பிராட்பேண்ட்' சேவை பயன்பாட்டு அளவு குறித்த தகவல் அனுப்பும்
வசதி அறிமுகம் செய்யப்படுகிறது.
இதுகுறித்து,
பி.எஸ்.என்.எல்., வெளியிட்டுள்ள அறிக்கை: வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும்
சேவையை, முழுமையாக மேற்கொள்ள, பி.எஸ்.என்.எல்., தரை வழி தொலைபேசி
வாடிக்கையாளர்களின், மொபைல் போன் எண் மற்றும் இ மெயில் முகவரியை, 53334
என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க வேண்டும். இதன்மூலம்,
ஒவ்வொரு முறையும், வாடிக்கையாளர்களின் விவரங்களை அறிய வேண்டிய நிலை
தவிர்க்கப்படும். தரை வழி தொலைபேசி எண்கள் பழுதடைந்தால், அவற்றை சரிசெய்ய,
லைன்மேனை அனுப்புவது, அவரின் பெயர் ஆகிய தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம்,
வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க,மொபைல் போன் எண் மற்றும் இ மெயில் முகவரி
உதவியாக இருக்கும்.
மேலும், மாதாந்திரகட்டணத்தையும், கட்டண ரசீதையும், வாடிக்கையாளருக்கு,
தபால் மூலம் அனுப்புவதற்குமுன், எஸ்.எம்.எஸ்., மற்றும் இ மெயில்
முகவரியிலும் தெரிவிக்க முடியும்."பிராட்பேண்ட்' சேவை பெறும்
வாடிக்கையாளருக்கு, "பிராட்பேண்ட்' சேவை உபயோக எவ்வளவு, எந்தத் தேதியில் ரீ
சார்ஜ் செய்ய வேண்டும் என்ற, விவரங்களையும், எஸ்.எம்.எஸ்., மூலம்
தெரிவிக்க முடியும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...