2013-2014ஆம் ஆண்டு பகுதி 2 திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்தவும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ \மாணவியர்களுக்கான ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள் வீதம் 32 மாவட்டத்திற்கு 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு பள்ளி ஒன்றுக்கு ரூ.2.00 இலட்சம் வீதம் 64 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.128.00 இலட்சம் ( 64 x 2) ""நடுநிலைப் பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்துதல்"" திட்டத்தின் மூலம் கணித ஆய்வு கூடங்கள் (Maths Learning in Upper Primary School) நிறுவ நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
1. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 6, 7, 8 வகுப்புகளில் குறைந்த பட்சம் 60 மாணவ\மாணவிகள் படிக்கும் பள்ளிகளை தேர்வு செய்யப்படவேண்டும்.
2. தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் கணிதம் கற்றல் திறனை வலுப்படுத்த கணித ஆய்வுகூடம் இருப்பதற்கு தனியாக கூடுதல் வகுப்பறை இருத்தல் வேண்டும்.
3. கணித ஆய்வுகூடம் தொடர்பாக கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்களை பள்ளிகளில் பாதுகாப்பாக இருப்பதற்கு தகுந்த இடம் இருத்தல் அவசியம்.
4. ஆர்வமும் திறமையும் உள்ள கணித பட்டதாரி ஆசிரியர் பணிபுரியும் பள்ளிகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
எனவே, மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இரண்டினை தேர்ந்தெடுத்து 05.03.2014க்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...