சிவகங்கையில் இரு கல்வி மாவட்டத்திலும் முறையாக
அங்கீகாரத்தை புதுப்பிக்காத தனியார் நர்சரி பள்ளிகளுக்கு கல்வித்துறை
எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இம்மாவட்டத்தில் தொடக்கக்கல்வித்துறை
நிர்வாகத்தின் கீழ் 148 நர்சரி தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு
பள்ளியும் மூன்றாண்டுக்கு ஒருமுறை அங்கீகாரத்தை புதுப்பிக்க விண்ணப்பிக்க
வேண்டும். தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில்
மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி உள்ளிட்ட கட்டமைப்புகளை ஆய்வு
செய்தபின், அங்கீகாரத்தை புதுப்பித்து மாவட்ட தொடக்கக் கல்வித்துத்துறை
அலுவலர் உத்தரவிடுவார்.
இதன்படி, நடப்பாண்டு வரை 108 நர்சரி
பள்ளிகளுக்கு அங்கீகாரம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 40 பள்ளிகள்
இன்னும் புதுப்பிக்கப்படாத நிலையில் செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளி நிர்வாகத்திற்கு தொடக்கக்கல்வித் துறை
எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "40 நர்சரி
பள்ளிகளில் 15 பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பிப்பதற்கான நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 25 பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.
புதுப்பித்து, அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு தடை விதிக்கப்படும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...