Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த முடிவு

 
              நீலகிரி லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
 
               மாவட்டம் முழுக்க ஓட்டுச் சாவடிகளில் பணிபுரிய, 3,060 ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்; இருப்பினும், கூடுதலாகவே பணியாளர்கள் உள்ளனர். தவிர, 62 தேர்தல் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 9 பறக்கும் படை, 9 கண்காணிப்புப் படை அலுவலர்கள் பணியில் நியமிக்க உள்ளனர். தேர்தல் பணியாற்ற உள்ள அதிகாரிகள், அலுவலர்களுக்கு பல கட்டமாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தவிர, ஓட்டுப்பதிவை கண்காணிக்க 305 வெப் கேமராக்கள் தயாராக உள்ளன; கூடுதலாக, 318 மேராக்கள் வரவழைக்கப்பட உள்ளன. வெப்கேமராக்களை இயக்கும் பணியில் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்படுவர். இவ்வாறு, கலெக்டர் சங்கர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive