மாநிலம் முழுவதும் செயல்படும், உயர்நிலை,
ல்நிலைப்பள்ளிகளில் முதுகலை மற்றும் பட்டதாரி தமிழாசிரியர்களின்
பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால், இப்பாடத்தில் தேர்ச்சி விகிதம்
குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், அரசு
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், ஆறு
முதல் ??ம் வகுப்பு வரை செயல்படும் உயர்நிலைப்பள்ளிகளில் பட்டதாரி
தமிழாசிரியர்களும், மேல்நிலைப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்
பணியிடங்களும் காலியாக உள்ளது.
இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கணிதம், அறிவியல் போன்ற பிற பாடங்களுக்கு,
பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து தற்காலிக ஆசிரியர்களை
நியமித்துக்கொள்ள மாற்று ஏற்பாடுகள் பள்ளிக்கல்வித்துறையால்
செய்யப்பட்டுள்ளது. தமிழ் பாடத்திற்கு, இதுபோன்ற மாற்று ஏற்பாடுகள் ஏதும்
செய்யாமல் கல்வித்துறை மெத்தனத்துடன் செயல்பட்டு வருகிறது.தமிழ்
மாணவர்களுக்கு படிப்பதற்கு எளிமையாக இருப்பினும், முதல் தாளில் செய்யுள்
பகுதியும், இரண்டாம் தாள் முழுவதும் இலக்கணப்பகுதியும் உள்ளது.
இலக்கணம் மற்றும் செய்யுள் பகுதியை
ஆசிரியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் மாணவர்கள் புரிந்துகொள்வது என்பது
இயலாதது. மனப்பாடம் செய்வதும் சிரமம்.தமிழக தமிழாசிரியர் மாநிலத்தலைவர்
ஆறுமுகம் கூறுகையில்,''கல்வித்துறை அதிகாரிகளின் மெத்தனத்தால் மட்டுமே
தற்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள்
காலியாகவுள்ளது. தெளிவான முடிவுகளை மேற்கொள்ளாததால் நீதிமன்ற வழக்குகள்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்நிலையில், கடந்த கல்வியாண்டு துவக்கம்
முதல் தற்போது வரை ???? தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.
இதனால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் தமிழ்
பாடத்தால் குறையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
மற்ற பாடங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் ஐந்து மாதமாக சம்பளம் வழங்கப்பட வில்லை
ReplyDelete