Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி,
இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும் தகுதியை மட்டுமே பெற்றுள்ளனர். இப்போது பணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனங்களில் முன்னுரிமை கிடைக்கும். மேலும் அடுத்த ஆண்டுக்கான பணி நியமனத்திலும் இவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் எனஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இப்போது தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்குதனியாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நியமிக்கப்படும் 15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராவதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே. அந்த வகையில் இந்த 75 ஆயிரம்பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.முதலில் இவர்களுக்கு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். பிறகு, பட்டதாரிஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இடைநிலை ஆசிரியர்கள்:

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்பு அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.தகுதியான விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வு செய்யப்படாதவர்களாகக் கருதப்படுவர்.இவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தங்களது மதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம்.அதேநேரத்தில், ஒரு தேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச் செல்லும் என்பதால், அடுத்து வரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெறுவதற்கான தகுதியையும் இவர்கள் பெறுவார்கள்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் என்பது அப்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் அடிப்படையில் இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும் தகுதியை மட்டுமே வழங்கும். பணி நியமனத்தை வழங்காது.ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிந்த பிறகு, இதுகுறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

எனவே, இதில் ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலை போன்ற பிரச்னைகள் எழவில்லை.இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29 ஆயிரம்பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களில் இப்போது 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.




18 Comments:

  1. please contact tntet 2012 82-89 marks candidate for further action cell 9842366268

    ReplyDelete
    Replies
    1. Wat further action? Ungaluku pass potadhe perusu!

      Delete
  2. cv finishedcanditaes when will get job

    ReplyDelete
  3. CV mudichavangala election munnadiye pottuduvanga

    ReplyDelete
    Replies
    1. Enna sir podaporanga naamam or pattai... Above hunderd eduthum namba life question mark... Porumaikkum oru ellai irukku sir.. Romba sodhikiraargal.... Really our curse will not let them live long... Those who made us wept and makes us weep.. First on the relaxation fighters next on govt. Ippadi proper job yarukkum kidaikkadha padi naasam pannitingale.. Neengallem nalla iruppinga.. Vazhga valamudan.. Idharkku thaane aasaipattinga.. TET pass panni CV mudichum naanga ellorum velai illa pattadharigal..Innum enna pandrathukku plan pannikittu irukkinga dear lovable relaxation fighters.. Act fast and make the nation waste using ur backward caste.. I am also one among u.. BC..My wish that the word reservation should be used in one aspect like Ticket reservation not for everything..

      Delete
    2. I understand ur pain frnd bcz me too hv the same pain...let the god to hear our painful words...namala ipdi polamba vacha yarum nalavea iruka matanga....include amma....

      Delete
  4. Pitiable Condition to the candidates who have already undergone CV. Postings may be after August 2014. What is the marks of 82-89 candidates? for ex: 42 for 90-104 candidates?... but for 82-89?

    ReplyDelete
  5. weightage 75 ku science vela yerukka yellaya so no jobna thirumba i should write tet ah yenna koduma sir

    ReplyDelete
  6. Joe Stalin... you are very correct...
    The other points to consider are:
    1. TET is only an eligibility test like CTET/NET/SET and we all very well know that CTET is valid only for 7 years. (Though NET/SET has lifelong validity)
    2. Likewise Tamil Nadu TET, I think will have some validity (say 7 or 8 years).
    3. The vacancy which rises will be filled as per the waiting list.
    4. So those who have already cleared TET and waiting join any private schools for now. (you can also demand good salary because you have cleared TET)
    So much of now, I think what will happen if there is another TET Exam in 2014?

    ReplyDelete
  7. COMMING MONDAY TET CV FINISHED CANDIDATE COME TO TRB , THERE IS NO OTHER WAY , IF THERE IS NO SOLUTION WE WILL GO KOTTAI FOR PERANI

    ReplyDelete
  8. naasama pochu naanga ellam jobku pogave mudiyatha, nan tet mark 93, but +2 ug ellam mark kammi so job kedaikkrathu kastam, tet mark padi job podunga pala varusathukku munna padicha padippai ellam base panni job podrathu worst pa, i hate the govt totally, nalla teacher vvvvvanum apdinnu sollitu votekaga admk panra attagam over. en mana nilaye kettu pochu.

    ReplyDelete
  9. My weightage mark is 77 in paper 2.-.English major - will i get a job before next tet exams comes?? we are very anxious to know the results whether positive or negative... Please TRB , kindly tell us some confirmation, so that we can prepare for our next tet exam for more weightage..

    ReplyDelete
  10. இப்படியா ஒரு அரசாங்கம் தவிக்க விடுறது....சும்மா புலம்பெயர் விட்டுட்டாங்களே
    சரி எல்லாம் நன்மைக்கே

    ReplyDelete
  11. இன்னிக்கி அதிகாலைல ஒரு கனவு கண்டேன்.

    ஒரு பெரிய மைதானம். யப்பா! திரும்புன தெசையெல்லாம் டிப் டாப்பா சனங்க கூட்டம். எல்லாரும் வரிசை வரிசையா அங்கிட்டு இங்கிட்டு திரும்பாம ஒரே தெசைய பாத்துக்கிட்டு நிக்கிறாங்க. என்னாடானு அங்கிட்டுப் பாத்தா ஒரு மேடை. அந்த மேடையில 2ன்னு ஒரு எழுத்து 4ன்னு இன்னொரு எழுத்து அப்பிடியே மின்னுச்சி. திடீர்னு எங்க அம்மா வந்து மைக்கில ஏதோ பேசுச்சி பாருங்க. அம்புட்டுதான். பூரா பேரும் கைதட்றாங்க. என்ன ஆச்சரியம். கைதட்ன கைல எல்லாம் ஒவ்வொரு அட்டைங்க இருக்குது. நான் அப்படியே பறந்து கூட்டத்த சுத்திப் பாத்தேன். எப்படியும் 3000 வயசானவங்க, 17000 எளவட்டங்க அப்புறம் ஒர 4000 சின்னஞ்சிறுசுக இருப்பாங்க (ரெண்டு நாலு மூனு முட்டை). அம்புட்டு பேரும் ஆடுறாங்க. பாடுறாங்க. ஒரே கொண்டாட்டந்தான் போங்க.

    அப்ப அந்த பக்கமா ஒரு வந்த ஒரு ஆளு எங்க அம்மாகிட்ட, ”அம்மா அங்கிட்டு ஒரு அம்பது அறுபதாயிரம் பேரு டிக்கெட்டு எடுக்க முடியாம வெளிய நிக்கிறாங்க”ன்னு சொன்னாரு. ஒடனே எங்க அம்மா தாயுள்ளத்தோடு ஒரு மந்திர புன்னகைய வீசி அங்கிட்டு திரும்பி பாத்தாங்க பாருங்க. இத டிவில பாத்துட்டு வெளியிலயும் ஒரே கொண்டாட்டம். நமக்கு டிக்கெட்டு கெடைக்கப் போகுது. டிக்கெட்டு கெடைக்கப் போகுதுன்னு ஒரே சந்தோசம்.

    கூட்டம் முடிஞ்சதும் உள்ள, வெளியனு இருந்த அம்புட்டு சனங்களும் ”எங்க வயித்துல பால வார்த்த நீ நல்லா இருக்கணும்மா. நீ தொட்டதெல்லாம் தொலங்கும்மா. நீ எங்களுக்கு மட்டுமா தாயி. இந்த ஊரு ஒலகத்துக்கே நீ தாம்மா தாயி” ன்னுஅம்புட்டு பேரும் நாட்டுப்புறப் பாட்டு பாடிக்கிட்டே வீட்டுக்கு போறாங்க. நானும் ஒரு அட்டைய கவ்விகிட்டு அப்படியே பறந்து வந்துகிட்டு இருந்தேன் பாருங்க என் சின்ன மவன் எம்மேலயே உச்சா போயி என்ன எழுப்பி வுட்டுட்டான்.

    ஏனுங்க! அதிகாலைல கனவு கண்டா பலிக்குமாங்க.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. r athu attaiya illa pazhaya plate-a nalla think panni parunga pls.. Because our situation is like that.. Just for joke dont get tensed sir.. The way u conveyed is interesting.. Me too expecting the same sir.. Let ur dreams come true... Lets pray to God the almighty...

      Delete
    3. Sir athu attaiya illa pazhaya plate-a nalla think panni parunga pls.. Because our situation is like that.. Just for joke dont get tensed sir.. The way u conveyed is interesting.. Me too expecting the same sir.. Let ur dreams come true... Lets pray to God the almighty...

      Delete
  12. Sir tet la 90 mark eduthavangaluku job kidaikuma? Kidakathanu govt solitangana rompa nallatha erunkum. Epa posting varum varum nu wait pani entha velaikum pokama entha govt enaku mental pattam kedaka porathu urithi

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive