ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,
* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
* மேலும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
* அரசியல் சட்டத்தின் 8- வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்படும்.
* இலங்கையில் தனி ஈழம் தேவையா என அறிய
வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக இலங்கை மற்றும்
வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்த முயற்சி
எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
* இலங்கையில் இனப்படுகொலை செய்தோர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம் செய்தோருக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.
* சட்டசபை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33
சதவிகிதம் இடஒதுக்கீடு பெற்றுத்தர உறுதியளிக்கப்பட்டுள்ளது. மகளிர் இட
ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
*மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்ட அதிமுக
பாடுபடும். * மத்தியில் ஊழலற்ற அரசு அமைய அதிமுக உத்தரவாதம் தருவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம்
உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். சாதாரண மக்களும் பயன்பெறும்
வகையில் வரிவிலக்கு அளிக்கப்படும்.
அம்மா, நீங்க ஆட்சிக்கு வாங்க.
ReplyDeleteithu oru ematru velai. 7th pay commission vanthal ellorukkum rs.500000 i thandividum. apparam ethu vri salugai. first munnadi kodutha cps vakkuruthi ennachu?
ReplyDeleteதிமுக தேர்தல் அறிக்கை இல் கூறியது போல விவசாய மற்றும் கல்வி கடனை அஇஅதிமுக ரத்து செய்வதாக அறிவித்தால் வெற்றி நிச்சயம்..
ReplyDelete