முதுகலை ஆசிரியர் பதவி உயர்வில், 50 சதவீத இடங்களை தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தி உள்ளது.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கத்தின் சார்பில், மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், சென்னையில் நடந்தது.
சங்க தலைவர், தியாகராஜன் தலைமை தாங்கினார்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், மத்திய அரசு ஆசிரியருக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும்; 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; பள்ளி கல்வித் துறையில், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் போது, 50 சதவீத இடங்களை, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் கோஷம் போட்டனர்.மாநிலம் முழுவதிலும் இருந்து 3,000த்திற்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். கோரிக்கைகளை, தமிழக அரசு பரிசீலனை செய்யாவிட்டால், பொதுக்குழுவை கூட்டி, அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்வோம் என தியாகராஜன் தெரிவித்தார்.
TAMS is the only association in tamilnadu to consider Middle bt promotion,CPS, Consolidate period to regurise. Because All the problems are there "Thalai var to Thodar Vari_Uduman
ReplyDeletesuper thalaiva
ReplyDeleteCPS ethirkira first sangam TAMS
ReplyDeletetams the leading association in tamil nadu. thanks thalaiva
ReplyDeletethalaiva unit transfer teacher date of appointment or trb rank seniority must bring in high scholl. please thalaiva
ReplyDeleteTAMS only ROCK IN TAMILNADU
ReplyDeleteநீங்கள் ( பட்டதாரி ஆசிரியர்கள் ) நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களையும் சேர்த்துக் கொண்டு இந்த கோரிக்கையை வைக்க வேண்டும். அவர்கள் பட்டதாரி ஆசிரியர்களைவிட உயர்பதவியில் உள்ளனர். ஒரு துறையில் உயர்பதவியில் உள்ளவர்களை விட்டுவிட்டு அதற்கு கீழ் நிலையில் உள்ளவர்களை நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் / உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நிலைக்கு மேலாக உள்ள முதுகலை பாடதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு செய்ய முடியாது. ஒரு வேளை அப்படியே செய்தாலும் சட்ட சிக்கல்கள் உருவாகும். இதற்கெல்லாம் ஒரே வழி, இரண்டு துறையையும் ஒன்றிணைத்து பணி மூப்பு மற்றும் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். இல்லையென்றால் இதற்கு தீர்வென்பதே இல்லை.
ReplyDelete