முதல் முறையாக வீடு வாங்க திட்டம் போட்டிருக்கிறீர்களா? கவீடெல்லாம் பார்த்துமுடிவு செய்துவிட்டால் யோசிக்காதீங்க. க மார்ச் 31 ம் தேதிக்குள் முடிவு செய்து வீட்டுக்கடன் வாங்கிடுங்க. இல்லாவிட்டால் கூடுதல் வரிச்சலுகை கிடைக்காது. ஆம், மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பித்தபோது, கடந்தாண்டு போட்ட பட்ஜெட்டில் தரப்பட்ட வரிச்சலுகைகள் சிலவற்றை தொடாமல் விட்டு விட்டார். இடைக்கால பட்ஜெட் என் பதால் கடந்த பட்ஜெட்டில் தரப்பட்ட கூடுதல் வரிச்சலுகைகள் மீண்டும் அறிவிக்கப்படவில்லை.
இதனால் சில வரிச்சலுகை திட்டங்கள் இந்த நிதி ஆண்டுடன் முடிந்து விடுகிறது. அப்படி கடந்த பட்ஜெட்டில் கிடைத்த கூடுதல் வரிச்சலுகையில் வீட்டு வசதி கடன் மீதான வட்டிக்கு தரப்பட்ட கூடுதல் வரிச்சலுகையும் ஒன்று.80இஇ வரிச்சலுகை திட்டத்தின் கீழ் இந்த கூடுதல் வரிச்சலுகை தரப்பட்டுள்ளது.முதன் முதலில் வீடு வாங்குவோருக்கு இந்த வரிச்சலுகை உண்டு. வீட்டுக்கடன் மீதான வட்டிக்கு கூடுதல் வரிச்சலுகை தரப்படும். வருமான வரி விலக்குக்கு இதை பயன்படுத்தலாம். முதன் முதலாக வீடு வாங்குவோர் Rs.40 லட்சம் மதிப்பில் வீடு வாங்கினால் அதிகபட்ச கடன் Rs.25 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
வருமானவரி சட்டம் 24ம் பிரிவின்படி, இந்த வட்டித்தொகையை ஆண்டுக்கு கணக்கிட்டு, அதில் இ ருந்து கூடுதலாக 1.5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு பெறலாம்.2013-14ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த கூடுதல் வரிச்சலுகை தரப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு தான் இந்த சலுகை தரப்பட்டதால் வரும் மார்ச் 31ம் தேதி, அதாவது, நடப்பு நிதி ஆண்டுடன் காலாவதி ஆகிறது. கடந்தாண்டு ரியல் எஸ்டேட் துறைக்கு ஊக்கம் தருவதற்காக இந்த கூடுதல் வரிச்சலுகை தரப்பட்டது. ஆனால், இந்தாண்டு பட்ஜெட்டில் இல்லை. புதிய அரசு அமைந்த பின் தான், இந்த சலுகை மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. வரி விலக்கு வரம்பில் கழித்து கொள்ளலாம்.
யார் யாருக்கு உண்டு?
80 இஇ திட்டத்தின் அடிப்படையில் இந்த சலுகை புது வீடு வாங்குவோருக்கு கிடைக்கும். கட்டுமான பணியில் இருக்கும் போதும் இந்த சலுகை பெற முடியும்.இந்தாண்டு ^1 லட்சம் வரை தான் வீட்டுக்கடன் மீதான வட்டி வருகிறது என்றால், அதற்கு சலுகை பெறலாம்.மீத தொகைக்கு அடுத்தாண்டு ரிட்டர்ன் தாக்கலில் பயன்படுத்தி கொள்ளலாம்.மொத்தத்தில் வீட்டுக்கடன் வட்டி மீதான வரி சலுகை 2.5 லட்சம் ரூபாய் வரை பெறலாம.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...