Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2-A தேர்வு


           நேர்காணல் இல்லாத குரூப் 2 A பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.நிதி, சட்டம், வருவாய், சிறை, காவல், சுகாதாரம், போக்குவரத்து மற்றும்

          பதிவுத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளில் உதவியாளர், பர்சனல் கிளர்க், லோயர் டிவிஷன் கிளர்க், உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன.

         வழக்கமான குரூப் 2 தேர்வைப் போல மூன்று கட்டமாக இல்லாமல், எழுத்துத் தேர்வின் மூலம் நேரடியாக ஊழியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.எழுத்துத் தேர்வு இரண்டு பிரிவுகளை உடையது. முதல் பிரிவில் பட்டப்படிப்பு கல்வித் தகுதி அடிப்படையிலான பொதுப் பாடங்கள் குறித்த வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்திய வரலாறு மற்றும் பண்பாடு தொடர்பான வினாக்கள் இடம்பெறும்.இரண்டாவது பிரிவில் பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலப் பாடத்திற்கான 100 வினாக்களை உள்ளடக்கியது. குரூப் 2-A தேர்வு குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை அணுகவும்.

விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள்:
            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேர்காணல் இல்லாத குரூப் 2-A பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான அடிப்படைத் தகுதிகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தங்களது அடிப்படைக் கல்வி தகுதியை 10+2 + 3 என்ற அடிப்படையில் பெற்றிருக்க வேண்டியதும் அவசியம்.மேலும் பத்தாம் வகுப்பில் தமிழை கட்டாயம் படித்திருப்பது முக்கியம்.

             மொத்தப் பணியிடங்களில் 20 சதவிகித இடங்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.நிதித்துறை பெர்சனல் கிளர்க் பணிகளுக்கு, வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியலில் இளநிலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும்.மேலும் லோயர் மற்றும் ஹையர் அளவில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.அனைத்துப் பணிகளுக்கும் குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதர பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு இல்லை.கூடுதல் விவரங்களுக்கு www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in ஆகிய இணைய தளங்களை அணுகவும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
            தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேர்காணல் இல்லாத குரூப் 2 A பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம்.இணைய தளம் வழியே மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க www.tnpscexams.net அல்லது www.tnpsc.gov.in இணைய தளங்களை அணுகவும்.விண்ணப்பிக்கும் போது, புகைப்படம், கையெழுத்து ஆகியவற்றை முன்னதாகவே ஸ்கேன் செய்து வைத்திருப்பது அவசியம். பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

              தேர்வுக்கட்டணம் 75 ரூபாய் மற்றும் விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாய் சேர்த்து மொத்தம் 125 ரூபாய் செலுத்த வேண்டும். நிரந்தர பதிவெண் பெற்றவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.கட்டணத்தை இணைய தளம், கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். இந்தியன் வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களிலும் கட்டணத்தை செலுத்த முடியும். இணைய தளத்தில் பதிவு செய்த விண்ணப்ப விவரங்களை பிரதி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய மார்ச் 5ஆம் தேதி கடைசி நாள். எழுத்துத் தேர்வு மே மாதம் 18ஆம் தேதி நடைபெறும்.தேர்வு நுழைவுச்சீட்டை தேர்வுக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive