தமிழகத்தில், 25, மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளாக,
நிரப்பப்படாமல்உள்ளன. மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) நியமனம், , 25
சதவீதம்,
அரசு தேர்வு மூலமாகவும், 75 சதவீதம், பணி மூப்பு அடிப்படையிலும்
நிரப்பப்படுகிறது.தற்போது, 25 இடங்களில், டி.இ.ஓ., பணியிடம் காலியாக
உள்ளது.
பல்வேறு காரணங்களை,உயரதிகாரிகளிடம் கூறி, இந்த பணியிடத்தை நிரப்ப விடாமல், சிலர் தடுத்து வருகின்றனர்.பெயர் வெளியிட விரும்பாத, அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், ஒருவர் கூறியதாவது: சென்னை, தேனி, புதுக்கோட்டை, திருநெல்வேலி உட்பட, பல இடங்களில், 25 மாவட்ட கல்வி அலுவலர்பணியிடங்கள், காலியாக உள்ளன. மாவட்டத்தில் உள்ள, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, நிதியுதவி, அரசின் நலத்திட்டங்கள் பெற்றுத் தருவது; ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது;

தேர்வுகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளை, டி.இ.ஓ.,க்கள் மேற்கொள்ள
வேண்டும். டி.இ.ஓ., இல்லாதஇடங்களில், பொறுப்பு அலுவலராக, தலைமை ஆசிரியர்கள்
நியமிக்கப்படுகின்றனர். அவர்கள்,இரு பணிகளை கவனிப்பதால், மாணவர்களின்
கல்வித் தரத்தில், முழு கவனம் செலுத்த முடிவதில்லை; பணிகளில் தொய்வு
ஏற்படுகிறது. இன்னும், 10 நாட்களில், பொதுத்தேர்வு துவங்க உள்ளது. மாணவர்
நலன் காண, பல்வேறு மாற்றங்களை, கல்வித் துறை இயக்குனரகம், நடப்பாண்டில்
கொண்டு வந்துள்ளது. அதுபோல, மாவட்டகல்வி அலுவலர்கள் பணியிடம் பூர்த்தி
செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...