Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிடவேண்டும்.

            2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிட கோரிய வழக்கில், டி.ஆர்.பி.,தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

          திருச்சி தென்னூர் வின்சென்ட் தாக்கல் செய்த மனு: ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)  சார்பில், 2012 ஜூலையில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. நான் பங்கேற்றேன். மொத்தம் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 2012 அக்டோபரில் நடந்த தேர்வில், 11 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
 
             பொதுப் பிரிவினரைத் தவிர, மற்ற சமூகத்தினருக்கு, தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி,தமிழக அரசு பிப்.,6 ல் உத்தரவிட்டது. இது, 2013 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கு மட்டும்பொருந்தும். இது ஒருதலைப்பட்சமானது.நான் பிற்பட்ட வகுப்பினர். எனக்கு, 83 சதவீத மதிப்பெண் கிடைத்தது. எனக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கினால், தேர்ச்சியடைந்து விடுவேன். 2012 ல் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும், 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்க உத்தரவிடவேண்டும், என குறிப்பிட்டார். நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வக்கீல்வி.பன்னீர்செல்வம் ஆஜரானார். பள்ளிக் கல்வித்துறை செயலாளர், டி.ஆர்.பி., தலைவர், துவக்கக்கல்வி இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை 8 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.




2 Comments:

  1. what is next action for cv finished candidate ? naalai namathey

    ReplyDelete
  2. please contact tet2012 82-89 mark candidate for further action cell9842366268

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive