ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 593பேர்களுக்கு முதுகலை
தமிழ் ஆசிரியர் பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக தமிழக முதல்வர்
ஜெயலலிதா 2 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
மேலும்,
தமிழ்நாடுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் நிரப்பப்படாமல்
இருந்த இளநிலை உதவியாளர்பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம்
தெரிவு செய்யப்பட்ட 23 பேர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும்
அடையாளமாகஜெயலலிதா ஒருவருக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன
ஆணை வழங்கினார். பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக் காலத்தில்
காலமான பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 504 பேர்களுக்கு கருணை அடிப்படையில்
இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமனஆணைகளை வழங்குவதன் அடையாளமாக
முதல்வர் ஜெயலலிதர்,ஒருவருக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...