இரட்டைப்பட்டம் வழக்கு சென்னை
உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானதால் ஒருங்கிணைப்பாளர்கள் உச்சநீதி மன்றம்
செல்ல முடிவெடுத்தனர். இது குறித்து வழக்கை நடத்தி வரும்
ஒருங்கிணைப்பாளர்கள் நம்மிடம் தெரிவித்ததாவது:
இவ்வழக்கு சம்பந்தமாக வழக்குரைஞரை சென்ற வாரம்
சந்திந்து ஆலோசணை நடத்தியுள்ளோம். எனவே உடனடியாக உச்ச நீதி மன்றத்தில்
சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். இது வரை இவ்வழக்கில்
50க்கும் மேற்பட்டவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். எனவே இவ்வழக்கில்
இணைந்து உச்ச நீதி மன்றம் வரும் அனைவருக்கும் மீண்டும் திருத்திய
முன்னுரிமை குழு பட்டியலை 1.1.2012 அன்று நடை முறையில் உள்ளவாறு பெற்று
தருவது உறுதி எனவும், கூடிய விரைவில் இவ்வழக்கில் தமக்கு சாதகமான தீர்ப்பை
பெறுவது உறுதி எனவும் நம்மிடம் தெரிவித்தனர். இவ்வழக்கு சம்பந்தமாக
திரு.இரா.கணேஷ்(9976105153), திரு.மு.கலியமூர்த்தி (9894718859),
திரு.ப.பாண்டியன் (9894192500) ஆகிய மூவரையும் இக்குழு நியமித்துள்ளது .
இந்தாண்டு பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் தள்ளிப்போகும் சூழலில்
இவ்வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தில் சூடு பிடிக்கும் என நம்புகிறோம்.
நன்றி - முத்துபாண்டியன்
When will be the promotion?
ReplyDelete