Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவு

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது பற்றிய முழுமையான விவரங்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள இந்த வட்டாரங்கள் அது வரை ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதியோடு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த வயது உயர்வு பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 10% அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 100%ஆக உயரும் அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள். தேர்தல் விதிகளை பாதிக்காது வகையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னேர இந்த 2 முடிவுகளும் வெளியாகும் என தெரிகிறது.




1 Comments:

  1. மத்தியஅரசு ஊழியர்களுக்கான ஒய்வுபெறும் வயதை 60 லிருந்து 62 ஆக உயர்த்துவதாக முடிவெடுத்தால் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு அரசுபணி கிடைக்கும் வாய்ப்பு பறிபோகும்.வேலையில்லா திண்டாட்டம் பெருகும்.அரசு ஊழியர்களுக்கு பதவிஉயர்வு பாதிக்கப்படும்.எனவே ஒய்வுபெறும்வயதை உயர்த்தாமல் 55 ஆக குறைக்கும் பட்சத்தில் இளைஞர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க வழிபிறக்கும்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive