தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1339 பேர் தேர்ச்சி.
தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நேற்று தொடங் கியது.
சான்றிதழ் சரிபார்ப்பு
தர்மபுரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற
பட்டதாரி ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தர்மபுரி அதியமான்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத் தில் நேற்று தொடங்கியது. மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலை மையில் கல்வித்துறை அதிகாரி கள்
சான்றிதழ் சரிபார்ப்பு பணியை முன்னின்று நடத்தினார்கள்.இந்த பணியில் 8
குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்த கலந்தாய்வில் முதல்தாளில் 417 பேரும்,
2-ம் தாளில் 922 பேரும் பங்கேற்கிறார்கள். வருகிற 27-ந்தேதி வரை சான்றிதழ்
சரிபார்ப்பு பணி நடக்கிறது.
நியமன ஆணை
இந்த பணி முழுமையடைந்த பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான ஆவணங்கள்
பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி
வைக்கப்படுகின்றன. அதன் பின்னர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி
நியமன ஆணைகள் வழங் கப்படும். பணி நியமனம் பெறு பவர்கள் அரசு பள்ளிகளில்
10-ம் வகுப்பு வரை பாடம் நடத்த உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1904 பேர் தேர்ச்சி.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் முதல்தாள் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வில் 687 பேரும், இரண்டாம் தாள் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வில்1,217 பேரும் என மொத்தம் 1,904 பேர் தேர்ச்சி பெற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சேலத்தில்இந்த பணிநாடுநர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் சேலம்
சூரமங்கலம் புனித சூசையப்பர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர் சங்கர்
தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஈஸ்வரன், மாவட்ட கல்வி அலுவலர்கள்
ராமலிங்கம் (சேலம்), திலகம் (சங்ககிரி), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்
மனோகரன், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் கல்வித்துறை
அதிகாரிகள் சான்றிதழ் சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.வருகிற 27-ந் தேதி
வரை அதாவது ஒருவாரம் தினமும் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு சான்றிதழ்
சரிபார்ப்பு பணிகள் நடைபெறும் என்றும், இந்த பணிகள் முடிவடைந்ததும்,
மதிப்பெண்கள் மற்றும் மாநில அளவில் தயார் செய்யப்படும் இனவாரியாக சுழற்சி
அடிப்படையில் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில அளவில் பட்டியல் தயாரிப்பு
இது குறித்து சென்னை அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர் சங்கர் கூறுகையில், தமிழகத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று (நேற்று) தொடங்கியது. இந்த பணிகள் வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது.சேலம் மாவட்டத்தில் தேர்வான 1,904 பேருக்கு சான்றிழ்கள் கல்வித்துறை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு பிளஸ்-2 மற்றும் டிப்ளமோ கல்வி சான்றிதழ்களும், பட்டதாரிஆசிரியர் பணிநாடுநர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும். அதன்பிறகு மாநில அளவில் இன வாரியாக சுழற்சி அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும், என்றார்.
மாநில அளவில் பட்டியல் தயாரிப்பு
இது குறித்து சென்னை அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனர் சங்கர் கூறுகையில், தமிழகத்தில் கடந்தாண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று (நேற்று) தொடங்கியது. இந்த பணிகள் வருகிற 27-ந் தேதி வரை நடக்கிறது.சேலம் மாவட்டத்தில் தேர்வான 1,904 பேருக்கு சான்றிழ்கள் கல்வித்துறை அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியர் பணிநாடுநர்களுக்கு பிளஸ்-2 மற்றும் டிப்ளமோ கல்வி சான்றிதழ்களும், பட்டதாரிஆசிரியர் பணிநாடுநர்களுக்கு பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., சான்றிதழ்களும் சரிபார்க்கப்படும். அதன்பிறகு மாநில அளவில் இன வாரியாக சுழற்சி அடிப்படையில் இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டு காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும், என்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 475 பேர் தேர்ச்சி.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு சான்றிதழ்சரிபார்க்கும் பணி நாகர்கோவிலில் திங்கள்கிழமை எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.
ஜன. 27-ஆம் தேதி வரை இப்பணி நடைபெறுகிறது. சான்றிதழ் சரிபார்ப்பில்
பங்கேற்கும் தேர்வர்கள் 12 விதமான சான்றிதழ் நகல்களை சான்றொப்பமிட்டு
சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி
மாவட்டத்தில் 475பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது. 4 பேரைக் கொண்ட குழுவினர் சான்றிதழ்
சரிபார்க்கும்பணியை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் இப்பணியை ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 1368பேர் தேர்ச்சி
திருச்சி இ.ஆர். மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதித்தேர்வில்தேர்ச்சிபெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தியதகுதித்தேர்வு1,2 தாள்களை மாவட்டத்தில் 14,573 பேர் எழுதினர். இதில் 1368பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதைத் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல மாநிலம் முழுவதும் திங்கள்கிழமைதொடங்கியது. 20 முதல் 23-ம் தேதி வரை தாள் 1-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், 24 முதல் 28-ம்தேதி வரை தாள் 2-ல் தேர்ச்சிபெற்றவர்களுக்கும் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். இப்பணிக்காக 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநில ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் இயக்குநர் கண்ணப்பன் மேற்பார்வையிலசான்றிதழ் சரிபார்க்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 577 பேர் தேர்ச்சி.
திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள்மேல்நிலைப் பள்ளி மையத்தில்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.ஆனந்தி தலைமையில் நடைபெற்றது. இதற்கான மாவட்டக் கல்வி அலுவலர், ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5 பேர் அடங்கிய குழுவினர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்சான்றிதழ்களை சரிபார்த்தனர். முதல் நாளில் 120 பேர் தங்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்காக பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 280 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 297 பேர் என மொத்தம் 577 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணிகள் வரும் 28-ஆம் தேதி வரை இந்த மையத்தில் நடைபெறஉள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,123 பேர் தேர்ச்சி.
ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு பணி,நாமக்கல்லில்நேற்று துவங்கியது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குமார் தலைமையில்துவங்கிய இப்பணி, ஏழு குழுக்காளாக பிரிக்கப்பட்டு சரி பார்க்கப்பட்டது.அதில், டி.இ.ஓ., பன்னீர்செல்வம், ஐந்து, பள்ளித் தலைமையாசிரியர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், அலுவலக உதவியாளர் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். ஜனவரி, 27ம் தேதி வரை நடக்கும் இப்பணியில், ஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் தாளில் வெற்றி பெற்றவர்கள், 262 பேர்,இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்கள்,861பேர் என, மொத்தம், 1,123 பேர் பங்கேற்கின்றனர். நேற்று முதல் நாளில், 169 பேரின் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.இப்பணியை, தமிழ்நாடு பாடநூல் கழக இயக்குனர் அன்பழகன் நேரில் ஆய்வு செய்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 487 பேர் தேர்ச்சி.
சிவகங்கை மாவட்டத்தில் இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கானசான்றிதழ் சரிபார்ப்பு, சிவகங்கை ஜஸ்டின் மேல்நிலைப் பள்ளியில்தொடங்கியது. மேல்நிலைப் பள்ளிகளின் இணை இயக்குநர் வை. பாலமுருகன்தலைமையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும்சிவகங்கை, தேவகோட்டை கல்வி மாவட்டங்களின் மாவட்ட கல்வி அலுவலர்கள்ஆகியோர் மேற்பார்வையில் 5 பிரிவுகளாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது.சிவகங்கை மாவட்டத்தில் தேர்வின் முதல் தாளில் வெற்றி பெற்ற 227பேர்களுக்கான சான்றிதழ்கள் ஜன. 20 மற்றும் 21ஆம் தேதியும், இரண்டாம்தாளில் வெற்றி பெற்ற 256 பேர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜன. 22முதல் ஜன. 24ஆம் தேதி வரையும் நடைபெறும்.
தேனி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 915 பேர் தேர்ச்சி.
ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேனி என்.எஸ்.மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமை சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடங்கியது. மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்றஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில்மொத்தம் 915 பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றஆசிரியர்களுக்கு தேனி என்.எஸ்.ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமைமுதல் ஜன.25-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,129 பேர் தேர்ச்சி.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி போளூர் அரசு மகளிர்மேல்நிலைப் பள்ளியில்திங்கள்கிழமை தொடங்கியது.
மெட்ரிக். துறையின் இணை இயக்குநர் கார்மேகம் மேற்பார்வையில்,
மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பொன்.அருண்பிரசாத், மாவட்டகல்வி அலுவலர்கள்
வீ.மதியழகன் (திருவண்ணாமலை), டி.ஜோசப்ராஜ்(செய்யாறு), மெட்ரிக். பள்ளி
ஆய்வாளர் சசிகலாவதி உள்ளிட்டோர்இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து
பொன்.அருண்பிரசாத் கூறியதாவது:7 குழுக்களாகப் பிரித்து குழுவுக்கு தலா 25
பேர் என 175 பேரின்சான்றிதழ்சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இப்பணி ஜனவரி
20 முதல் 27வரை நடைபெறும். இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்ற
413பேரும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 716
பேரும் என1,129 பேர் பங்கேற்கவுள்ளனர் என்றார்.
வேலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில்1,550 பேர் தேர்ச்சி.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர்தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,550பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணி திங்கள்கிழமை தொடங்கியது .
வேலூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் நாள்தோறும் தலா 150ஆசிரியர்களுக்கு
சான்றிதழ் சரிபார்க்கும் இப்பணியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
சுப்பிரமணியன் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மனோகரன், பிரியதர்ஷினி
மற்றும் தலைமை ஆசிரியர் குழுவினர் மேற்கொண்டனர். சான்றிதழ் சரிபார்ப்புப்
பணி இம்மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 927 பேர் தேர்ச்சி.
கிருஷ்ணகிரியில் திங்கள்கிழமை பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ்கள்சரிபார்க்கப்பட்டதுகிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 927பேருக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சான்றிதழ் சரிபார்ப்புப்பணி திங்கள்கிழமை தொடங்கியது.
பள்ளி கல்வித் துறை இணை இயக்குநர் சுகன்யாபணிகளை கண்காணித்தார். இடைநிலை ஆசிரியர்களுக்கான தாள் 1-இல் 343 பேரும்,பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2-இல் 584 பேர் என மொத்தம் 927 பேருக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளன. முதன்மைக்கல்வி அலுவலர் எம்.ராமசாமி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் முருகேசன்,கணேஷ், தொடக்கக்கல்வி அலுவலர் துரைசாமி உள்ளிட்டோர் சான்றிதழ்சரிபார்க்கும் பணியை ஒருங்கிணைத்தனர்.
i have one doubt tamil medium certificatekku 10th 12th m theviya illa ug, bed mattum podhuma pls today cv attenderpls tell
ReplyDeletetet kku tmail medium ug b.ed mattum podhuma ? pls reply
ReplyDeleteதமிழ் வழி சான்றிதழ் முதல் தாளுக்கு DTEDமட்டும் பெற்றால் போதும்
ReplyDeleteஅதேப்போல் இராண்டாம் தாளுக்கு UGமற்றும் BED மட்டும் போதும்
paper 2 weitage 73& tet mark 93,community mbc, can i get job? sub (maths)
ReplyDeletetet kku tmail medium ug AND b.ed mattum podhum.
ReplyDeletepothum.conduct 9842437071
ReplyDeleteHi all,
ReplyDeleteJust Now I finished my CV today for TET 2
UG weightage calculated on the basis of all parts which includes language also. So some of the candidates percentage reduced from 70's to 60s.
who are all studied in UG & B:ed only Tamil Medium.They only eligible for tamil medium quota. So most of the science candidate not eligible for tamil medium quota.
Consolidated Mark statement is enough.