ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பள்ளிகளுக்கு பணி மாறுதல் அளித்துவிட்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கவேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைமை நிலையச்செயலாளார் கி.வேலுச்சாமி கோரிக்கை.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் அனைத்து வட்டார வள மையங்களிலும் ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி புரிந்து வருகிறார்கள். இதில் வருடந்தோறும் பணி மூப்பு அடிப்படையில் 500 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி மாறுதல் பெற்று வருகிறார்கள். இவர்கள் பல இடர்பாடுகளை கடந்து வட்டார வளமையங்களில் பணி யாற்றி வருகிறார்கள். கடந்த வருடத்திற்குறிய 500 ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளிகளுக்கு பணி மாறுதல் செய்யப்படும் என்று அறிவித்து ஆனால் இதுவரை பணி மாறுதல் செய்யப்படாமல் உள்ளனர்.
இதற்கிடையே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் நியமனம் செய்வதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. வட்டார வளமையங்களில் 5 வருடங்களுக்கு மேல் மிகவும் சிரமப்பட்:டு பணியாற்றி நன்கு பயிற்சிபெற்றுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிகளில் உள்ள ஆசிரியக்காலிப்பணியிடங்களில் பணி நியமனம் செய்தால் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் உபரியாக உள்ள ஆசிரியர்களையும் கணக்கெடுப்பு செய்து அவர்களுக்கும் பணி மாறுதல் வழங்கினால் அவர்களும் ஒரு இடத்தில் நிலையாக பணி புரிய வாய்ப்பு ஏற்படும்.
ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும், உபரி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்திவிட்டு மீதியுள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இவ்வாறு இல்லாமல் காலியாக உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை கலந்தாய்வு முறையில் பணி நியமனம் செய்துவிட்டு பின்னார் ஆசிரிய பயிற்றுனர்களுக்கும், உபரி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்தினால் தற்போது பணி மூப்பு அடிப்படையில் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்களை பணி நியமனம் செய்வதற்கு முன்பு ஆசிரியர் பயிற்றுனர்களுக்கும், உபரி ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்திட நடவடிக்கை எடுக்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் விடுத்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.
thankstopadasalai
ReplyDeleteAmmavidam tagaval senral maatra vaaipirukku boss
ReplyDeletevery good demand .thanks to velusamy sir
ReplyDeleteGood request...
ReplyDeleteGud ....
ReplyDeleteஇந்த நல்ல கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிப்பது மட்டுமல்லாமல் மற்ற மாவட்ட ஆசிரியர் பயிற்றுனர்களிடமும் கலந்தாலோசிப்பதும் நல்லது. (தர்மபுரி மாவட்டம் )
Deleteneengal select anathu kooda comepetitive exam thane sir trb or other exam engaluku puriyavillai sollungal ungaluku school kodupathu sariyanathu than tet pass panna nangal ungal velaiku poga ready but ungaluku seekiram pg or school hm promotion varum athu miss panna poringala
ReplyDeletethanks, tet 2 pass aana ellathukum job kidaikkum CM AMMA MANASU VACHATHAN .................. AMMA ELLATHUKKUM VAALKKAI KUDUKKURAGA NAMMAKKUM VAALKKAI KODUPAGA ................
ReplyDeleteMAANBUMIKU AMMA AVARKALUKKU INTHA KORIKKAI MIKAVUM MU KKIYAMANATHU AKKUM.PLEASE CONSIDERED ABOVETHE DEMAND..
ReplyDeleteவளமைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு ஆதரவாக கோரிக்கை வைத்த வேலுச்சாமி ஐய்யா மனமார்ந்த நன்றி பென்னாகரம் (வ வ மையம்) தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணமூர்த்தி ஆ ப
ReplyDeleteKrishna Morty sir nice photo and nice msg ...pls give ur no...Andrew from k.giri
Delete9043459416 ஹாய் பவுல் pls give ur no
DeleteAppreciate u for your timely request
ReplyDeleteRTE padi 1to 8 standard varai than tet but tn government eppadi 9,10 teachers appoinmenta i tet mulam niyamikuthu it is aganist the act any one clarify
ReplyDeletesuper
ReplyDeleteஐயா சூப்பர். மட்டுமே போதாது 8 வருட கஷ்டம் நல்ல நியாயமான கருத்தை பதிவு செய்யுங்கள். நன்றி
Deletevery fantastic demand, honourable amma avl please considered above demand.thanks.
ReplyDeleteவருட வருடம் 500 ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் செய்வது வழக்கம் ஆனால் இந்த வருடம் இன்னும் அனுப்பவில்லை ஆசிரியர் பயிற்றுனர் ,மற்றும் உபரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வில் தேர்வானவர்களை பணியமர்த்தும் முன். பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்ற தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைமை நிலையச்செயலாளார் கி.வேலுச்சாமி ஐய்யவுக்கும், எங்கள் செய்தியை வெளியிட்ட பாடசாலை க்கு மனமார்ந்த நன்றி ..
ReplyDeletevery very thanks to padasalai andmr velusamy sir.
ReplyDeleteFeb 15 kulla TET appointment conform but joining date conform ah jun than friends by thiru
ReplyDeleteTET APPOINTMENT I POTTA PIRAKU BRTE'S KKUM UPARI AASIRIYARKALUKKUM COUNCELLING NADATHINA SENIORITYIL UIIAVANGALUKKU PERIYA PAATHIPPU AARPADUM, ATHANAL MAANBUMIKU AMMA AVARKAL PLEASE CONSIDERED ABOVE DEMAND.GOOD DEMAND.
ReplyDeleteநிச்சயமாக மாண்பு மிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் considered செய்வார்கள் என்று நாங்களும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம்
Deleteamma manasu vacchal nitcaiyam nadakkum sir
ReplyDeleteCorrespondent la padichalum consolidate markshet venuma?
ReplyDeleteTamil medium certificate english format la vangalama
ReplyDeleteEn name english la write pandrathukum tamila write pandrathukum difference varuthu athanala ethavathu prob varuma
ReplyDeleteMihavum kadinamaga ulaikum brte makkalukku nichaym gamma nallathu seiyum. Nampuvom.
ReplyDeleteIf it happens.all brtes will get new birth.Definitely our honourable C.M AMMA will help.
ReplyDeleteஇந்த நல்ல வேண்டுகோளை முதல்வர் நிறைவேற்றவேண்டும்
ReplyDeleteகோரிக்கை நிறைவேற வாழ்த்துக்கள்
ReplyDeleteபழனியப்பன் சார் நன்றி
DeleteALL BRTES PLEASE STAND BEHIND AND GIVE OUR SUPPORT TO MR.VELUSAMYSIR
ReplyDeletesuper ,CM AMMA AVARGAL CONSIDER PANNAVUM
ReplyDeleteMANPUMIGU AMMA AVARGAL CONSIDER PANNAVUM,PLS
ReplyDeleteவருடத்திருக்கு 500 ஆசிரிய பயிற்ருனர்களை பள்ளிக்கு அனுப்பவேண்டும் என்பது அரசு ஆணை ஆனால் அரசே இதை மதிக்காமல் காலம் தாழ்த்துவது என்பது வேதனைக்குரியது. டெட் மூலம் பணியமர்த்திய பிறகு 8 வருடம் வேலை செய்த நாங்கள் மற்ற மாவட்டங்களில் குடும்பத்தை விட்டு வேலை செய்வது என்பது எந்த விதத்தில் நியாயம். 8 வருடம் தினம் ஒரு பள்ளி என்று சென்று கால் கடுக்க நின்று பயணம் செய்து வந்த எங்களுக்கு அரசு காட்டும் நன்றி இது தானா. நாங்கள் என்ன தவறு செய்தோம் எங்களை ஏன் அரசு வஞ்சிக்கிறது.
ReplyDeleteநல்லது நடக்கும்
Delete