Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SG Asst's Low Pay Scale

 

          ஆறாவது ஊதியக்குழு அறிவிப்பு வந்தவுடன் PB:1: 5200-20200+GP2800 பார்த்து அதிர்ந்து போனோம்! காரணம் வாங்கிகொண்டு இருந்த சம்பளம் குறைந்து விட்டதை கணக்கிட்டு தான்!!

              ஆறாவது ஊதியக்குழு அறிவிப்பு வந்தவுடன் 5200-2800 பார்த்து அதிர்ந்து போனோம் ! காரணம் வாங்கிகொண்டு இருந்த சம்பளம் குறைந்து விட்டதை கணக்கிட்டு தான்!! 4500-125-7000 வாங்கிய போதே அதற்கு இணையான ஊதியம் கிடைக்கவில்லை நம்மாலும் 750க்கு மேல ஏதும் பெற முடியவில்லை! காரணம் பல!! ஆறாவது ஊதியம்குழுல 4500க்கு இணையான ஊதியத்தை பெறமுடியாத நம்மால் 7வது ஊதியக்குழுல 5200-2800க்கு இணையான ஊதியத்தை பெற முடியுமா என்பதே கேள்விகுறி?
 
                ஆனால் நாம் நமது பிரச்சனை தீர தற்பொழுது உள்ள ஊதியக்கட்டுக்கு இணையான ஊதியத்தையும் விட மேல பெற வேண்டும்!? நடைமுறைக்கு சாத்தியமா? "ஒரு உண்மையை உணருங்கள்" இடைநிலை ஆசிரியர் ஊதியம் 5200-2800 எனில்? நன்கு சிந்தித்துப்பாருங்கள் தேர்வுநிலை பெற்று 9300 ஊதியக்கட்டில்  உள்ளவர்கள் மற்றும் இடைநிலை தலைமை ஆசிரியர்கள் 7வது ஊதிய குழுவில் நீங்களும் அதிர்த்து போக வேண்டி இருக்கும் காரணம் 5200-2800 ஊதியக்கட்டில் உள்ள ஒருவர் அவர் பணியில் பதவி உயர்வு பெரும் போது என்ன ஊதியக்கட்டு நிர்ணயிக்கலாம் என்று ஒரு ஊதியக்கட்டை நினைப்பார்கள் அதுபடி பார்த்தல் அன்று நீங்கள் பெறும் ஊதியத்தை  விட அது குறைவாக தான் இருக்கும்!!! அப்பறம் 1.86 மாதிரி ஏதாவது  கணக்கு சொல்லி பெருக்க சொல்லுவாங்க அதுக்கு அப்பறம் என்ன நடக்கும் உங்களுக்கு தெரியாத என்ன??"". இன்றும் மேல்நிலை பள்ளி, உயர் நிலை பள்ளி , ஆசிரியர்கள் என்னிடம் பேசும் போது சொல்கிறார்கள் உங்க சங்கங்கள் நினச்சதான் எதையும் செய்ய முடியும்! அரசு உங்கள பார்த்தாதான் அசறுதுனு.... அந்த நம்பிக்கை நம்மிடம் இல்லையா? இன்று TETOJAC கையில் எடுத்துள்ள பிரச்சனை வெறும் இடைநிலை ஆசிரியரின் ஊதிய பிரச்சனையாக கருதாமல் அது தான் நமது அடித்தளம் என்பதை உணர்தவர்களாக பொங்கி எழுவோம்!!! 
 
                    இப் பிரச்சனையை தீர்க்கும் முன் 7வது ஊதிய குழு பரிந்துரை வந்தால் நாம் என்னென்ன பிரச்சனையை சந்திக்க நேரிடும் என்று சிந்தியுங்கள்... வீடுக்கட்ட எந்த பரப்பளவில் அடித்தளம் போடுகிறோமோ அந்த அளவிற்கு தான் வீட்டை நாம் கட்ட இயலும் இதை அறியாதவரா நாம் நமது அடித்தளமான இடைநிலை ஆசிரியரின் ஊதிய பிரச்சனை நீக்கப்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என உணர்ந்தவர்களாய்... நமக்காக TETOJAC அமைத்துள்ள போராட்ட களத்தில் சங்கமிப்போம்... வா தோழா வா.. வா.. உன் பொறுப்பு உணர்ந்தவனாக உன் சக ஆசிரியர்களை திரட்டிக்கொண்ட ஒரு படையாக ஒரு படைதளபதி போல் வா.. வா.. ஒன்றினையத்தான் சங்கம் நம்மை பிரித்து பலம் குறைந்தவனாக காட்ட அல்ல என்பதை உணர்ந்த நாம் சங்க வேறுப்பாடு இல்லாமல் இணைவோம் நமது கோரிக்கை வெற்றி பெறும் முன் சங்க தலைமை ஏதேனும் பின் வாங்கினாலும் அனுபவப்பாடம் கற்ற நாம் 7 - 6ஆகவோ அல்லது 4 ஆகவோ அல்லது 1 ஆனால் கூட சங்க வேறுப்பாட்டினை கடந்து இடைநிலை ஆசிரியர் அடிப்படை ஊதியம் 9300-4200 கிடைக்கும் வரை போராட்ட களத்தில் இருந்து வெளியேற மாட்டோம் என்ற முழக்கம் நமது அரசின் காதிலும் நமது சங்க தலமையின் காதிலும் ஒலிக்கும் படி ஆக்ரோஷ ழுழக்கம் போட்டு கொண்டு போராட்ட களத்தை நோக்கி வா தோழா வா..வா.. பிப்ரவரி - 2ம் தேதி மாவட்ட தலைநகரை நோக்கி வா அடுத்து சென்னை என்னதை அறிவிப்போம் இப்படை சென்னை வந்தால் சென்னை என்னாகும் என அரசு அதிச்சியடைய செய்வோம் வா.. வா.. ம.மனோகுமார்




1 Comments:

  1. evlavu porattam nadathinalum,unity venum sir athu public kittayum illa ,namma than athiga strengthngranga ana nammala seniorku eathavathu percentage kodutha udane silentagidranga nammala government nalla purinju vachuruku sir,feb2 poorattatha theevirap paduthunga sir,kindly inform to our sg teachers to john at there

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive