"குறைந்தபட்சம் 800 ஆசிரியர்கள் அமர்ந்து
திருத்துவதற்கு ஏற்ப, விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்வு செய்ய
வேண்டும்" என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் பிளஸ் 2 மற்றும்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அரசு பொதுதேர்வு நடைபெற உள்ளது. அதன்பின்
விடைத்தாள் திருத்துவதற்காக, அந்தந்த மாவட்டங்களில் கட்டாயம் 5 பள்ளிகளை
தேர்வு செய்ய வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த மையங்களில்
கட்டாயம் ஒரே நேரத்தில் 500 முதல் 800 ஆசிரியர்கள் வரை தங்கி பணியில் ஈடுபட
வசதியாக மேஜைகள், நாற்காலிகள், ஆசிரியர்களுக்கு, அடிப்படை வசதிகளான
குடிநீர், சுகாதார வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த வசதிகள் உள்ள மாவட்ட தலைநகரில் இருந்து 8
கி.மீ., சுற்றளவிற்குள் உள்ளும், அதற்கு வெளியேயும் உள்ள விடைத்தாட்கள்
திருத்தும் மையங்கள் குறித்த விபரங்களை சேகரித்து அனுப்புமாறு,
தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர்
கூறுகையில், "விடைத்தாட்கள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மனம்
அமைதியான சூழலில் பணி செய்தால் மட்டுமே, சரியான மதிப்பெண்கள் வழங்க
முடியும். இதற்காக, ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு சிக்கல் இல்லாத வகையில்
விடைத்தாள் திருத்தும் மையங்கள் தேர்வு செய்யப்படுகிறது" என்றார்.
ஏதோ குளறுபடியின்றி நட்ந்தால் நல்லது. அதிகமாக மெட்ரிக் பள்ளியிலும் இதற்கு முன்னர் தேர்வுதுறையால் முறைகேடு நடந்து ரத்து செய்த பள்ளிக்கும் காளான்களாக் முளைத்த மெட்ரிக் பள்ளிக்கு தேர்வு மையம் கொடுக்கப்பட்டது. எங்கள் மெட்ரிக் தேர்வு மையம் பெற்றுள்ளதால் அடுத்த ஆண்டு அட்மிஷன் அதிக பணம் பறிக்க இப்போதே செய்திதாளில் விளம்பரம் கொடுத்து இறைத்த பணத்தை வார பார்க்கிறது.
ReplyDeleteஅன்பினியீர், எந்த விடைத்தாள் திருத்தும் முகாமில் இருக்கை மேசை போடப்படுகின்றன? எல்லாம் பள்ளிகளில் நடைபெறும் முகாம் ஆதலால் மாணவர்கள் உட்காரும் அதே டெஸ்க், அல்லது பெஞ்ச், தானே நடைமுறையில் உள்ளது, அதுவும் பல சமயங்களில் அழுக்கும் தூசியுடன் இருக்கும், ஆசிரியர்கள் தம்மையே நொந்துகொண்டு திருத்தி வருகின்றனர் என்பதுதானே உண்மை,
ReplyDeleteYes Sir, we are appreciation
Deleteமாணவர்களும் மனிதர்கள் தானே..... அவர்கள் அமரும் டெஸ்க்கில் அமர்ந்தால் என்ன குறைவு ஏற்பட்டுவிடப் போகிறது?
ReplyDeleteSaamy varam koduththaalum poosaarri ...
Deleteமாணவர்கள் அமரும் பென்ச்சில் அமரலாம் தவறில்லை.ஆனால் PRE KG மாணவர்கள் அமரும் அரை அடி உயர பென்ச்சில் எட்டு நாட்கள் அமர்ந்து பேப்பர் திருத்த சொல்கிரார்கல் என்ன செய்வது.உண்மையில் இது எனது அனுபவம் .
ReplyDeleteFirst action: all teacher's must be joined in the exam valuation camp
ReplyDeleteX th std. Camp opened date same date,
ReplyDelete