மாற்றுத்திறனாளி பி.எட்.,பட்டதாரிகளுக்கு,சிறப்பு ஆசிரியர் தகுதி
தேர்விற்கான பயிற்சியளிக்க,அனைத்து மாவட்டங்களிலும் மையம்
அமைக்கும்படி,மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர்
உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவு:
பி.எட்., முடித்து பணியில் இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு, எதிளில் பணி
கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.),
ஆசிரியர்தேர்வு வாரியத்தால் நடத்தப்படும்.இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும்
பார்வையற்றவர்களுக்கு, மாவட்டங்களில் உள்ள, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி
நிறுவனம் வாயிலாக, சிறப்பு பயிற்சிவழங்க, பள்ளிக்கல்வித்துறை மூலம்
நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர்,தலைமையில் நடந்த,
மாற்றுத்திறனாளிகள்கோரிக்கை குறித்த ஆலோசனைக்கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும், நகரின்
மையப்பகுதியில் எளிதில் அணுகும் வண்ணம் மையத்தை, மாவட்ட ஆசிரியர் கல்வி
பயிற்சி நிறுவனம் முதல்வர்கள்,தேர்ந்தெடுக்க வேண்டும். அங்கு,
பார்வையற்றோர் பயன்படுத்த ஏதுவாக, குடிநீர், கழிப்பறை வசதி இருக்கவேண்டும்.
தலா 50 நபர்களைக் கொண்டு பயிற்சி நடத்துவதற்குரிய 2 அறைகள் இருக்க வேண்டும். ஈரோடு, விழுப்பும்,வேலூர், கோவை,சேலம், மதுரை, நெல்லை போன்ற பெரிய மாவட்டங்களில், 3 அறைகள் (150 பேர்)இருக்குமாறு மையத்தை தேர்ந்தெடுக்கலாம்.மையத்தை தேர்வு செய்வதற்கும், பயிற்சி நடத்துவதற்கும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒத்துழைக்க வேண்டும்.அம்மையத்தின் பெயரை முதல்வர்கள், ஜன.,6 க்குள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு, 73730 03351 என்ற மொபைல் எண்ணில்,உதவி பேராசிரியரைத்தொடர்பு கொண்டு தெரிவிக்கவேண்டும். பயிற்சி காலம் 40 நாட்கள். பயிற்சிக்குரிய கால அட்டவணை அனுப்பி வைக்கப்படும். பயிற்சிக்குரிய கருத்தாளர்களை தேர்ந்தெடுப்பது நிறுவன முதல்வர்களின் பொறுப்பு. பயிற்சி நடத்துவதற்கான செலவின விபரங்கள் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு,அதில் கூறப்பட்டுள்ளது.

blind candidates only or all disabled candidates pls let me know this.
ReplyDeleteblind only, please see GO215
ReplyDeletesir,
ReplyDeletemudhalil questions and answer key set pandra nibunargaluku sirapu maiyam amaithu training kodunga question sariya edukama answer key sariya set panama exam nadathi engalai pola appavigalai 6 masama emathura velai ini seyyathinga nanga sambathika tet eluthina neenga lawyers sambathikavum case podavum exam vecha eppadi so question set pandravangaluku training koduthu adutha tet exam vainga illana trb ku romba kashtam engalukum kashtam