மதுரை உட்பட 5 மாவட்டங்களில், அரசு பொதுத்
தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும்
தலைமையாசிரியர்கள், கல்வி அமைச்சர் வீரமணி முன்னிலையில், மதுரையில் நாளை
(ஜன.,7)விளக்கம் அளிக்கின்றனர்.
பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்து,
அமைச்சர் தலைமையில் நடக்கும் ஆய்வுக் கூட்டத்தில், செயலாளர் சபீதா,
இயக்குனர்கள் ராமேஸ்வர முருகன், தேவராஜன் மற்றும் மதுரை, தேனி,
ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள்
பங்கேற்கின்றனர். இதில், கடந்த ஆண்டில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் குறைத்து காட்டிய பள்ளிகளின்
தலைமையாசிரியர், பாட ஆசிரியர்களையும் பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகள்
உத்தரவிட்டுள்ளனர். 'தேர்ச்சி குறைந்ததற்கான காரணம் குறித்து, அமைச்சரிடம்
தனித்தனியே விளக்கம் அளிக்க வேண்டும்' என, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்டத்தில், கடந்தாண்டை விட, பத்தாம்
வகுப்பில் தேர்ச்சி விகிதம் குறைந்த 25 பள்ளிகள், பிளஸ் 2 வில், 5
பள்ளிகள், மிக குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற 30 பள்ளி ஆசிரியர்கள்,
தலைமையாசிரியர்கள் பங்கேற்கின்றனர். அரசின் இந்த நடவடிக்கையால் அவர்கள்
கலக்கத்தில் உள்ளனர்.
கலக்கம் ஏன்? கற்றுக்கொடுப்பது ஆசிரியர் வேலை, படிப்பது மாணவர்கள் கட்மை. அதிகாரிகளுக்கு தெரியாதா? இப்படியா ஆசிரியர்களை உறுத்துவது.
ReplyDelete