பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள்
மார்ச் மாதம் தொடங்க உள்ளன. தற்போது செய்முறை தேர்வுகளை தொடங்குவதற்கான
அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத் துறை செய்து வருகிறது. இந்நிலையில், பொது
தேர்வுகளை குழப்பம் இன்றி நடத்துவது குறித்து தேர்வுத் துறை திட்டமிட்டு
வருகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் இந்த ஆண்டு 100
சதவீதம் தேர்ச்சி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப அனைத்து
மாவட்ட கல்வி அலுவலர்கள் செயல்பட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில் தேர்வு முடிகின்ற வரை கல்வி
அதிகாரிகள், ஆசிரியர்கள் இனி விடுப் பில் செல்ல முடியாது.
பொதுத்தேர்வில் தவறுகள், குழப்பங்கள் ஏதாவது
நடந்தால் சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க
தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. கேள்வித்தாள் காப்பு மையம் அமைப்பது,
விடைத்தாள் எடுத்து செல்வது உள்ளிட்ட பணிகளில் ஆசிரியர்கள் எப்படி செயல்பட
வேண்டும் என்பது குறித்தும் திட்டமிட்டு வருகிறது.கடந்த ஆண்டு ஒவ்வொரு
பள்ளியிலும் எவ்வளவு தேர்ச்சி இருந்தது என்பது குறித்து விவரம் அனுப்பவும்,
தேர்ச்சியை அதிகரிக்க சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்தும்
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் விவரம் பெறவும் தேர்வுத் துறை முடிவு
செய்துள்ளது. ஒவ்வொரு பள்ளியும் பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி
பெறுவதற்காக தலைமை ஆசிரியர் களை அழைத்து கூட்டம் போட வேண்டும். அதேபோல,
ஒவ்வொரு பள்ளிக்கும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரடியாக சென்று பார்த்துவர
வேண் டும். தேர்வு நேரத்தில் தேவைப்படும் வாகனங்கள் எவ்வளவு என்பது
குறித்து விவரம் தெரிவிக்க வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை
செய்து கொடுப்பது, தனியார் பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு
இருந்தால், தேர்வு மையம் வைக்க வழங்கப்பட்ட உத்தரவை சரிபார்த் தல்,
கூடுதலாக மாணவர் களை தரையில் உட்கார வைக்காமல் இருப்பது, கண்டிப்பாக
இருக்கை வசதி செய்து கொடுப்பது உள்ளிட்டவை இந்த ஆண்டு முழுமையாக
நிறைவேற்றவும் தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. இந்த ஆலோசனைகள் அனைத்தும்
விரைவில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக
அனுப்ப தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தேர்வுத் துறை
அறிவுரைகளை மீறி தேர்வின் போது குழப்பம், தவறுகள் நடந்தால் சம்பந்தப்பட்ட
அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்வுத் துறை பரிந்துரை செய்யும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...