தொலைபேசி நாகரீகம் என்பது பலரும் பெரிதாக
நினைக்காத ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே,
அந்தப் பண்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்த
வேண்டும்.
* தொலைபேசியில் பேசத் தொடங்கும்போது, ஹலோ
அல்லது வணக்கம் என்ற வார்த்தைகளுடன் தொடங்குவது அவசியம். பிறரை நாம்
அழைக்கும்போதும் சரி அல்லது நம்மை பிறர் அழைக்கும்போதும் சரி, இந்தப்
பண்பாட்டை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
* முதன்முதலில் ஒருவரிடம் பேசும்போது, தன்னை எளிமையாக அறிமுகப்படுத்திக் கொண்டு பேச வேண்டும்.
* அதேபோன்று, புதிய நபரிடம் பேசும்போது, தாங்கள் பேசும் நபர்களைப் பற்றிய அறிமுகத்தைப் பெற வேண்டும்.
* பிறருக்கு வந்த அழைப்பை நாம் பெற நேரும்போது,
பேசியவரை, தயவுசெய்து காத்திருக்கச் சொல்லி, சம்பந்தப்பட்டவரை அழைத்து
வருவதாக கூற வேண்டும். அதை செய்யாமல், தொலைபேசியை காதில் வைத்துக்கொண்டே,
கூப்பிட வேண்டிய நபரை சத்தமாக அழைக்கக்கூடாது.
* தொலைபேசியில் ஒரு விஷயத்தை கேட்டுக் கொள்ள
நேர்ந்தால், அதை மிகவும் கவனமாக கேட்டுக் கொள்ள வேண்டும். கவனக்
குறைவாகவும், அரைகுறையாகவும் கேட்டுக் கொண்டு தவறான தகவல்களை
தந்துவிடக்கூடாது.
* பேசிவிட்டு, தொலைபேசியை வைக்கும்போது, நன்றி என்று மறக்காமல் கூறிவிட்டு வைக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...