'பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை,
ஆண்டுதோறும் மே- இறுதிக்குள், கல்வித்துறை நடத்த வேண்டும் என, வலியுறுத்தி,
பிப்ரவரியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதென,' உயர்,மேல்நிலைப்பள்ளி
பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.
உயர், மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள்
சங்க மாநில செயற்குழு கூட்டம் சிவகங்கையில் நடந்தது. மாநில தலைவர்
பக்தவச்சலம் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் மாயவன் முன்னிலை வகித்தார்.
பொது செயலாளர் கோவிந்தன், பொருளாளர் சொர்ணலதா உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
தீர்மானம்: அரசு பள்ளிகளில், பட்டதாரி
ஆசிரியர்களை நியமித்த முதல்வர் ஜெ.,விற்கு நன்றி தெரிவிப்பது, ஆசிரியர் -
மாணவர் விகிதாச்சாரம் 1:20 படி, ஆசிரியர்களை பணி நிரவல் செய்யவேண்டும்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். கல்வித்துறை, பள்ளிகளில்
காலியாக உள்ள உதவியாளர், ஊழியர்கள் பணியிடங்களை நிரப்பவேண்டும். ஒவ்வொரு
ஆண்டும், பதவி உயர்வு, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கை, மே- இறுதிக்குள் நடத்திட
வேண்டும். இந்த கோரிக்கைகளை, வலியுறுத்தி, மாநில அளவில் அந்தந்த மாவட்ட
தலைநகரங்களில், பிப்ரவரியில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்துவதென,
தீர்மானித்தனர். மாநில நிர்வாகி சேதுசெல்வம் நன்றி கூறினார்.
SGT to BT promotion பற்றி இன்னும் தகவல்கள் வரவில்லை சங்கங்கள் எதுவும் குரல் கொடுக்கவில்லை இவர்களும் வழக்கு தொடுத்துக்கொண்டு தீர்ப்பு கிடைக்காத நிலையில் உள்ளனர்.இந்த ஆண்டு பதவி உயர்வு வாய்ப்பு உண்டா? இல்லையா?
ReplyDeleteDouple degree judgement vantadum promotion taruvanga boss
ReplyDeleteJUDGEMENT EPPO SIR
Delete