Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாசிப்பு திறனை மேம்படுத்த ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு உத்தரவு


           மாணவர்களிடம் "வாசிப்பு திறன்" குறைந்து வருவதால், அதை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ள அனைவருக்கும் கல்வி திட்ட ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

          அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் அடிப்படை, கட்டட வசதிகள், மாணவர்களுக்கு தேவையான கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட்ட நிலையில் வட்டார மேற்பார்வையாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

         அவர்கள் பணியை, ஆசிரியர் பயிற்றுனர்களின், சீனியர் பொறுப்பில் இருப்பவர்கள், கூடுதலாக கவனித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படாத நிலையில், தற்போது, பள்ளிகளின் மாணவர்களின் தரத்தை அறியும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

           அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது; பள்ளிகளில், மாணவர்களின் வாசிப்பு திறன் 50 சதவீதம் வரை தான் உள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் பணியாற்றும், ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளிகள் வாரியாக சென்று மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறனை பரிசோதித்து, 100 சதவீதம் வாசிப்பு, எழுதும் திறனை உருவாக்குமாறு கூறியுள்ளனர்.

              பொங்கல் முடிந்த பின், நிதி ஒதுக்கீடுபெறப்பட்டு, புதிய பணிகள் தொடங்க வாய்ப்புகள் உள்ளன" என்றார்.




5 Comments:

  1. ஆசிரியர் பயிற்றுனர்கள்பள்ளிகள் வாரியாக சென்று மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறனைமேம்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  2. ஆசிரியர் பயிற்றுனர்கள்பள்ளிகள் வாரியாக சென்று மாணவர்களின் வாசிப்பு திறன், எழுதும் திறனைமேம்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  3. ஆசிரிய பயிற்றுனர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு ஓரு மாதம் பயிற்சி அளித்து மாடலாக எடுத்து காண்பிக்க வேண்டும்

    ReplyDelete
  4. ஆசிரிய பயிற்றுனர்களை கொண்டு பள்ளி மாணவர்களுக்கு ஓரு மாதம் பயிற்சி அளித்து மாடலாக எடுத்து காண்பிக்க வேண்டும்

    ReplyDelete
  5. Primary teacher basic nalla solli kodukka vendum. Avarkalidam ethu patri koora vendum.aasiriya payitrunar evarkalai kankaanithal pothum

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive