மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
மதுரை, தேனி, ராமநாதபுரம்,
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை
ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது:
அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி அறிவு
கிடைக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். வரும்
கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் மாணவர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் ஏற்கெனவே, மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து விட்டனர். அரசுப் பள்ளிகளில் ஜூன்
மாதத்தில் குழந்தைகள் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்ற நடைமுறையை கைவிட்டு,
இப்போதே அரசுப் பள்ளிகளிலும் மாணவர்
சேர்க்கையைத் தொடங்க வேண்டும்.
எஸ்எஸ்ஏ அலுவலர்களின் முக்கிய பணிகளில்
மாணவர் சேர்க்கையும் ஒன்று. அவர்கள் இப் பணியில் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்,
பள்ளித் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து மாணவர் சேர்க்கையில் ஈடுபட
வேண்டும்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி,
தமிழகத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும்
கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி மார்ச் 2014-க்குள் செய்து தரப்படும் என அரசு தரப்பில் உத்தரவாதம்
அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாவட்டம் தோறும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் கழிப்பறை, குடிநீர் வசதி தேவைப்படும் பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
பட்டியலில் கொடுக்கப்பட்ட கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிக்கான நிதி ஒதுக்கீடும்
செய்யப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே உள்ள கழிப்பறை, குடிநீர்த்
திட்டங்களில் மராமத்து போன்ற பணிகளுக்கும், விடுபட்ட பணிகளுக்கும் அந்தந்தப் பகுதி எம்.பி., எம்.எல்.ஏ., ஆட்சியர், திட்ட அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சித் தலைவர்கள் போன்றோரை அணுகி நிதி ஒதுக்கீடு பெற்று மேற்கண்ட
வசதிகளை முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.
கல்வித்துறை அதிகாரிகள்
அலுவலகத்திலிருந்தே பணியாற்ற வேண்டும் என்ற மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று அங்குள்ள நிலைகளை அறிந்து மாணவர்களுக்கான
வசதிகளிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். ஆசிரியர்களை பணியாற்ற வைக்க
வேண்டும், என்றார்.
வரவேற்க்க கூடிய கருத்து. அம்மாவின் ஆசையை ஆசிரியர்கள் தவறாது நிறைவேற்ற வேண்டும் என்பது பொதுமக்களின் ஆணித்தரமான கருத்தாகும்.
ReplyDelete