வருங்கால வைப்பு நிதியின் ஆண்டு கணக்கு விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து தொழிலாளர்களுக்கு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன மண்டல அலுவலர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தொழிலாளர்களின் வைப்பு நிதி குறித்த ஆண்டு கணக்கு விவரங்கள் இதுவரை நிறுவனங்களுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டு வந்தன. அதை நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கி வந்தன.தற்போது வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2012-2013 ஆம் ஆண்டு முதல்"எம்ப்ளாயர் இ-சேவா' என்ற இணையதளத்தில் ஆண்டு கணக்கு விவரங்களை பதிவேற்றம் செய்து வருகிறது. இதனை நிறுவனங்கள் பதிவிறக்கம் செய்து, தொழிலாளர்களுக்கு விநியோகிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...