ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி
நிறுவனங்கள், பி.எட் கல்லூரிகள், உடற்கல்வி கல்லூரிகள் ஆகியவற்றை புதியதாக
தொடங்க வேண்டும் என்றால் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்திடம் (என்சிடிஇ)
அனுமதி பெற்று மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
இயக்ககத்தில் அங்கீகாரம் பெற வேண்டும்.
அப்படி தொடங்கப்படும்
கல்லூரிகள் பள்ளிகள் அனைத்தும் என்சிடிஇ விதிகளுக்கு கட்டுப்பட்டவை.
இந்நிலையில் 2009ல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு
வந்தபோது அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கும்போது தகுதி தேர்வில்
தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவித்தது.
அதனால் பி.எட் படித்தவர்கள் தகுதித் தேர்வு
எழுத ஆர்வம் காட்டினர். மேலும் பி.எட் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில்
சேரத் தொடங்கினர். ஆனால் 2010-11ல் என்சிடிஇ, 13 மாநிலங்களில் ஆசிரியர்
பயிற்சி பள்ளிகள், கல்லூரிகள் தொடங்குவதை நிறுத்தி வைத்தது. புதிய
கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் இயங்கும்
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து பெறும் சான்று தமிழகத்தில் செல்லாது
என்று அரசு தெரிவித்துவிட்டது. மேலும், தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி
முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின்
எண்ணிக்கையும் அதிகரித்தபடியாலும், தகுதித் தேர்வு எழுதித்தான் ஆசிரியர்
வேலை பெற முடியும் என்ற நிலையும் ஏற்பட்டதால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில்
மாணவர்கள் சேர்க்கை சரியத் தொடங்கியது. அவற்றின் மவுசு குறையத்
தொடங்கியது.
இதனால் கடந்த ஆண்டில் 100க்கும் மேற்பட்ட
தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன. தற்போதைய நிலவரப்படி அரசு
ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 33, நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்
40 மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 450 தான் உள்ளன. ஏற்கனவே
தனியார் ஆசிரியர் பள்ளிகள் 750க்கும் மேற்பட்டவை இருந்தன என்பது
குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி
பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் சில கட்டுபாடுகளை
கொண்டுவருவது தொடர்பாக புள்ளி விவரங்களை என்சிடிஇ சேகரிக்கத் தொடங்கியது.
இதற்காக கடந்த ஜூலை மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் அனைத்து
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் தங்கள் பள்ளி பற்றிய அனைத்து விவரங்களையும்
என்சிடிஇக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதை சரிபார்த்த பிறகு புதிய
பள்ளிகள் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துவிட்டது.
ஆனால் தமிழகத் தில் உள்ளநிலையை அறிந்த
தனியார்கள், புதிய பள்ளிகள் தொடங்க யாரும் விருப்பம் காட்டவில்லை. இதனால்
தமிழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் வரவில்லை என்று என்சிடிஇ
தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆண்டும் சில தனியார் ஆசிரியர் பயிற்சி
பள்ளி களை மூட திட்டமிட்டுள்ளனர்.
தவிரவும், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்,
நிதியுதவி பெறும் பள்ளிகளில் குறைந்த அளவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த
ஆண்டும் தனியார் பள்ளிகள் மூடப்பட் டால் அரசுப் பள்ளிகளில் மொத்தமே 4000
பேராவது படிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறை ந்த பட்ச மாணவர்களை
வைத்துக் கொண்டு அரசுப் பள்ளிகளை எப்படி நடத்துவது என்று அரசும் யோசித்து
வருகிறது.
அதனால் வரும் காலத்தில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் மூடப்படும் சூழல் ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
எக்ஸ்ட்ரா தகவல்
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி
நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மொத்தம் ரூ.63.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.
இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ரூ.65.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...