இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்தில், தற்போது
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால், சீனியாரிட்டியில்
முன்னிலை பெற்ற ஆசிரியர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், பணி
அனுபவத்திற்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க மூத்த ஆசிரியர்கள் கோரிக்கை
வைத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு
மூன்றாவது முறையாக, தமிழகத்தில் நடத்தப் பட்டது. இதில், சுமார் 6 லட்சம்
ஆசிரியர்கள் பங்கேற்று தேர்வெழுதினர். இதில், முதல் தாளுக்கான தேர்வில் 12
ஆயிரத்து 433 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் 3000 இடைநிலை ஆசிரியர்கள்
நிரப்பப்படவுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்காக, பாடவாரியாக காலி பணியிடங்களை தொகுக்கும் பணியில் ஆசிரியர் தேர்வு
வாரியம் ஈடுபட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனம் தொடர்பாக
உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு தற்போது, முடிவடைந்ததால்,
பட்டதாரி ஆசிரியர்கள் போன்று, வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு
செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடியாக
அறிவித்தது.
அதன் படி, தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வரும், சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், வேலைவாய்ப்பு பதிவுக்கு முன்னுரிமை குறித்து எவ்வித தகவல்களும் பெறப்படவில்லை.
பணி அனுபவத்திற்கும் மதிப்பில்லாததால், மூத்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெயிட்டேஜ் முறையில், இடைநிலை ஆசிரியர்கள்
தேர்வில், பிளஸ் 2 மதிப்பெண், ஆசிரியர் பட்டயத்தேர்வு மதிப்பெண் மற்றும்
ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்களை கணக்கிட்டு பணி நியமனம்
செய்யப்படவுள்ளது. தற்போதைய கல்வி முறையும், மதிப்பெண் வழங்கும் முறையும்,
15 அல்லது 20 வருடங்களுக்கு முன்பு இருந்த கல்வி முறை, மதிப்பெண் வழங்கும்
முறையை ஒப்பிடுவது என்பது சரியாக அமையாது.
இதுகுறித்து, கோவை மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ""கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு மாவட்ட அளவில்
சீனியாரிட்டி பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுவந்தனர். பின்பு, மாநில அளவில் சீனியாரிட்டி என்று மாற்றப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டனர்.
தற்போது, சீனியாரிட்டியில் முன்னிலையில்
இருக்கும் என்னை போன்றோர், வெயிட்டேஜ் முறையால் பின்னுக்கு தள்ளப்படும்
வாய்ப்பு எழுந்துள்ளது. 20 வருட அனுபவங்களுடன் காத்திருக்கும் என்னை போன்ற பலர்
பாதிக்கப்பட்டுள்ளனர். பணி அனுபவத்திற்கும், வெயிட்டேஜ் மதிப்பெண்
கொடுக்கவேண்டியது அவசியம்,'' என்றார்.
good news
ReplyDeleteRaise your hands against of weightage marks.
ReplyDeletecorrect sir atleast bed seniority matumavadhu parkanum .same weightage and same quota irrundhal yappadi rank list poduvargal. tharindhal ans pls to padasalai
ReplyDeleteCandidates those who got above 85 in paper1can get job
ReplyDeleteCandidates those who got above 85 in paper 1 can get job
ReplyDeletecase podunga boss
ReplyDeleteCandidates those who got above 85 in paper 1 can get job
ReplyDeletePaper 1 final list eppo varum
ReplyDeleteKaram serpom varungal
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர்களின் பணி அனுபவம் வேலை வாய்ப்பு காத்திருப்பு காலமும் கட்டாயம் கணக்கிடபடவேண்டும் . பத்து ஆண்டுக்கு மேல் தனியார் பள்ளிகளில் அரசின் பழைய வெயிடேஜ் முறையை நம்பி காத்திருந்து பாஸ் செய்த ஆசிரியர்கள் கனவு கானல் நீரா?.வாருங்கள் கரம் சேர்ப்போம் புது விதி செய்வோம்.
ReplyDeleteonly the hands of court
ReplyDeleteSENIYARITTIKU weitage mark kodukkanum sir......
ReplyDeleteSENIORITY ku kattayam mark kodukkanum sir.....kattayam arasu parinthurai pannumnu ninaikiren.Aana case-a pottukitte iruntha yarume velaikku poga mudiyathuya.....YERKANAVE irukkura kesukke vidai theriyala.....GOV. mudivedukkattum.....
ReplyDeleteBc women paper 1 weightage 82. Tet mark 104 . DOB 1980 vaipu ullatha?
ReplyDeleteவெயிட்டேஜ் முறையே முட்டாள் தனமானது வருடம் வருடம் கல்வி முறை மாறிவருகிறது எப்படி அணைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்,+2ல் குருப்1 குருப் 2 செய்முறை தேர்வில் மார்க் குறைவு எழுத்து தேர்வில் அதிக மார்க் எடுக்க வேண்டும் ஆணால் குருப் 4 மற்றும் அணைத்து பாட பிரிவுகளும் செய்முறை மதிப்பெண் அதிகம் உண்டு எப்படியும் இவங்க மெத்த மதிப்பெண் அதிக மாக வரும் இவர்களும் அவர்களும் எப்படி ஒண்றாகும் எப்படி விகிதாசாரம் கடைப்பிடமுடியும், இம் முறையை ரத்து செய்து,சீனியார்டு அடைப்படையில் பணி வழங்கவேண்டும் அப்படி இல்லை எண்றால் TET மதிப்பெண் அடைப்படையில் வரிசை படுத்த வேண்டும் அப்படி செய்தால் மட்டுமே ஒருபோட்டி ஏற்படும்
ReplyDeletesir Anonymous
ReplyDeleteவாருங்கள் கரம் சேர்ப்போம் புது விதி செய்வோம்.
weightage முறையை ரத்து செய்து,சீனியார்டு அடைப்படையில் பணி வழங்கவேண்டும் அப்படி இல்லை எண்றால் TET மதிப்பெண் அடிப்படையில் வரிசை படுத்த வேண்டும் . MUTHALVAR AMMA NATAVADIKKAI EDUKKANUM...
ReplyDeleteHELLO friends...............
ReplyDeletekandipa tet mark padi posting poda solanum............
hi friends....
ReplyDeleteen TET paper 2 mark 103..........female major tamil..........weightage 71..........
hi friends anybody tell me botany vacancy.any guess? please
ReplyDelete