சென்னையிலுள்ள அரசு பொது மருத்துவமனை, சென்னை அரசு
ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை அரசு ராஜாஜி
மருத்துவமனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருநெல்வேலி
மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு
மருத்துவமனை, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
மற்றும் கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளில்
உள்ள செவிலியர் பயிற்சி பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டு வகுப்பிலும் 645 பேர் அரசு பயிற்சி உதவித் தொகை பெற்று வருகின்றனர்.
இந்தப் பயிற்சிப் பள்ளிகளில்
செவிலியர் பட்டயப் படிப்பு பயிலும்
அரசிடமிருந்து உதவித் தொகை பெரும் செவிலியர் பயிற்சி மாணவியர்களை ஊக்குவிக்கும்
வகையில் தற்போது வழங்கப்படும் முதலாம் ஆண்டு
கல்வி உதவித் தொகை, 400-ரூபாயிலிருந்து 600 ரூபாய் ஆகவும், இரண்டாம் ஆண்டு
உதவித் தொகை 440 -ரூபாயிலிருந்து 700- ரூபாயாகவும், மூன்றாம் ஆண்டு
உதவித் தொகை 480 -ரூபாயிலிருந்து 800-ரூபாயாகவும் உயர்த்தி வழங்க முதல்&அமைச்சர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள் ளார்.
இதனால் அரசுக்கு ஆண்டொன்றிற்கு கூடுத லாக 60 லட்சத்து 37 ஆயிரத்து 200 ரூபாய் செலவினம் ஏற்படும். மொத்தம் 1,935 மாணவியர்கள் ஆண்டு தோறும் பயன் பெறுவார்கள். இத்தகவல் தமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...