உங்கள்
சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக
மறுக்கிறதா? கவலைப்படாமல் அரை தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து தேய்த்துப்
பாருங்கள். நிச்சயமாகப் போய் விடும்.
‘இட்
இஸ் கான்....’. ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான்
நாம் சர்க்கரை என்ற பெயரில் அன்றாடம் அள்ளி அள்ளித் தின்று
கொண்டிருக்கிறோம். விடாத மைஅழுக்கையே சில நொடிகளில் போக்கும் இந்த
சர்க்கரையை சலிக்காமல் தினந்தோறும் உட்கொள்ளும் நமது குடல் என்ன பாடுபடும்?
என்ற நமது சிந்தனையை சர்க்கரையின் இனிப்பு சுவை மழுங்கடித்து விடுகிறது
என்ற அதிர்ச்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இனிப்யை
விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில்
எழுந்தவுடன் குடிக்கும் டீ, காப்பியில் இருந்து இரவு படுக்கச் செல்லும்
முன் குடிக்கும் பால் வரை சர்க்கரையும் நமது அன்றாட உணவினூடே ஒரு
ஊடுபொருளாக நமது குடலுக்குள் செல்கிறது.
இது தவிர, கிலோ கிலோவாக இனிப்பு தின்பண்டங்களை தின்று தீர்ப்பவர்களும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
’இல்லாத
ஊருக்கு இலுப்பம் பூதான் சர்க்கரை’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, இலுப்பம்
பூவைப் போன்று வெள்ளை வெளேர் என்று சிரிக்கும் சர்க்கரையை, ஆலைகளில்
எப்படி தயாரிக்கிறார்கள்? என்கிற விபரத்தை முழுமையாக தெரிந்து
கொண்டவர்கள் அதைத் தொடக்கூட ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்.
இந்த
வெள்ளை சர்க்கரையை தயாரிக்க என்னென்ன வகையான ரசாயனப் பொருட்கள்
பயன்படுத்தப்படுகின்றன? என்பதை வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள
‘மாலை மலர் டாட்.காம் விரும்புகிறது.
1.
கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் புளுயுடு பாக்டீரியாவை
கட்டுப்படுத்த பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் ரசாயனம்
பயன்படுத்தப்படுகிறது.
2.
பிழிந்தெடுக்கப்பட்ட கரும்பு சாற்றுடன் 60 சென்டிகிரேட் முதல் 70
சென்டிகிரேட் கொதிநிலையில், ஒரு லிட்டர் கரும்பு சாற்றுடன் 200 மில்லி
பாஸ்போரிக் ஆசிட் வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த கட்டத்தில்
பாஸ்போரிக் ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்தப்படுகிறது.
4.
102 சென்டிகிரேட் வெப்பநிலை கொண்ட கொதிகலனில் சூடுபடுத்தப்படும் இந்த சாறு
தன்வசம் தேக்கி வைத்திருந்த நல்ல விட்டமின்களை இழக்கின்றது: எதிர்
வினையாக, அளவுக்கு அதிகமான செயற்கை சுண்ணாம்பு சத்து கூடி விடுகிறது.
5.
அடுத்த கட்டமாக, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் இட்டு மண்,
சக்கை போன்ற பொருள்களை தெளிய வைத்து, வடிகட்டி, பிரித்து எடுத்த பின்னர்
தெளிந்த சாறு கிடைக்கிறது.
6.
மீண்டும் கொதிகலனில் இட்டு காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து,
நீர்த்துப் போய் கிடக்கும் கரும்பின் சாறு அடர்த்தி மிக்க சர்க்கரை
குழம்பாக உருமாற்றப்படுகிறது.
7.
அதன் பின்னர், சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும்
சேர்க்கப்பட்டு, படிக நிலையில் கற்கண்டாக சர்க்கரை மறுபிறவி எடுக்கிறது.
இந்த மறுபிறவி காலத்தில் சல்பர் டை ஆக்சைடு எனப்படும் மெல்லக் கொல்லும்
நஞ்சு, ஒவ்வொரு துளி சர்க்கரையிலும் பரவி, கலந்து விடுகிறது.
8.
இவ்வாறு தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.
அதனால் தான், தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான
சர்க்கரையை பயன்படுத்த கூடாது என நமது முன்னோர்கள் வலியுறுத்தி வந்தனர்.
9.
தயாரிக்கப்பட்டு ஆறு மாத காலத்தை கடக்கும் போது சர்க்கரையில் உள்ள சல்பர்
டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக
மாறிவிடுகிறது.
இதன்
விளைவாக, குடல் சார்ந்த நோய்கள் மட்டுமன்றி, பல் வலி, பல் சொத்தை,
குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சர்க்கரை வியாதி,
இரத்த அழுத்தம் போன்ற கொடிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான
காரணியாக அமைகின்றது.
எனவே, ஆலைகளில் தயாரான வெள்ளை சர்க்கரையின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு,
வெல்லம், பனை வெல்லம், நாட்டுச் சர்க்கரை போன்றவற்றை தாராளமாக பயன்படுத்தி
மேற்கண்ட நோய்களின் தாக்கத்தில் இருந்து விலகியே இருப்பதன் மூலம்
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ள முடியும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ளவமவெளியிடப்பட்டுள்ளது. .
ReplyDeleteஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ளவமவெளியிடப்பட்டுள்ளது. .
ReplyDeletethanks padasalai ithu pondrathoru nalla seithikalai tharuvathu makkalukku mukkiyam than .
ReplyDeleteVery very thanks to our padasalai net work...
ReplyDeleteஇது போன்ற ஆரோக்கியமான உடல் ஆரோக்கியத்திற்கான தகவல்களை மக்களுக்கு தருவது உண்மையிலேயே ஒரு நல்ல விஷயம். தொடர்ந்து அது போன்ற செய்திகளை வெளியிட வேண்டும் . பாடசாலைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறேன் . நன்றி . இவண் : சி.சுகுமார் , தலைமையாசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி , ஆதனூர் , தி.மலை மாவட்டம் .
ReplyDeleteஇது போன்ற பயனுள்ள செய்திகளை தரும் பாடசாலைக்கு என் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் . உண்மையிலேயே இது மக்களுக்கு ஒரு பயனுள்ள செய்தி . இவண் : சி .சுகுமார் , தலைமையாசிரியர் , ஆதனூர் , திருவண்ணாமலை மாவட்டம் .
ReplyDeleteஇது போன்ற பயனுள்ள செய்திகளை தொடர்ந்து வெளியிட எனது பாராட்டுக்கள் . இவண் : சி.சுகுமார் , தலைமையாசிரியர் , ஆதனூர் , திருவண்ணாமலை மாவட்டம் .
ReplyDeletemy snicere thanks to padasalai site ot publish this kind of news . by C.SUGUMAR ,HM ,GHS , ADHANUR , TV MALAI DISTRICT
ReplyDelete
ReplyDeleteஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ளவெளியிடப்பட்டுள்ளது. .
ReplyDeleteஆரோக்கியமான வாழ்க்கை முறையை நாம் ’இனிதாக’ மேற்கொள்ளவெளியிடப்பட்டுள்ளது. .
thank u thank u padasalai
ReplyDeletethank u thank u padasalai
ReplyDeleteHearty thanks to u sir, it's really useful information.
ReplyDeleteHearty thanks to u sir, it's really useful information.
ReplyDeletethank you for this very useful instruction
ReplyDeletethank you for the useful instruction
ReplyDeleteTHANK YOU FOR YOUR FINE TIPS.PADASALAI INFORMATIONS ARE VERY USEFUL IN ALL FEILDS. BY T.VELMURUGAN.
ReplyDeletevery very useful to us, padasalai news. keep it up. congradulations to ur social service and guidance. thankl u. kasimanoharan, thellar
ReplyDeletevery very useful to us, padasalai news. keep it up. congradulations to ur social service and guidance. thankl u. kasimanoharan, thellar
ReplyDeletethank you for this article to create awareness and know truth about white sugar. I request school teachers to tell students to avoid whitesugar in their houses.
ReplyDeleteDear sir,
ReplyDeleteThanks for your valuable information. murugesan, dharmapuri
Very good news for sir i thanks to padasalai network thanking you.....
ReplyDelete