நாட்டிலுள்ள அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும்,
உள்கட்டமைப்பு மற்றும் வியூக செயல்பாடு ரீதியாக தன்னிறைவு பெற்று விளங்க
வேண்டுமென, அந்த வாரியத்தின் தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டு
துவக்கத்திலும், அனைத்து CBSE இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பப்படும
வருடாந்திர கடிதத்தில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர் இதுதொடர்பாக மேலும் கூறியுள்ளதாவது: எனது
முயற்சியால் அறிமுகப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான மற்றும் விரிவான
மதிப்பாய்வு கொள்கை(CCE - Continuous and Comprehensive Evaluation), நல்ல
மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி, முதன்முதலாக மதிப்பாய்வு
செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவர்கள், முந்தைய ஆண்டுகளின் மாணவர்களைவிட, தங்களின்
தேர்வுகளில் சிறப்பாக பங்காற்றியுள்ளார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
CBSE தலைவரின் வருடாந்திர கடிதம் என்பது,
இணைப்பு பள்ளிகளால் பெரிதாக எதிர்பார்க்கப்படும் ஒரு அம்சமாகும். ஏனெனில்,
இந்த கடிதத்தில் கடந்தாண்டு சாதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த
அம்சங்கள் இடம்பெற்றிருப்பதுடன், வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய
விஷயங்களும் தெரிவிக்கப்பட்டிருக்கும்.இந்தாண்டுதான், முதன்முதலாக, அனைத்து
பள்ளிகளுக்கும் வெவ்வேறு தலைப்புகளில் CBSE தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதனால் இந்தாண்டின் கடிதம், அதிக முக்கியத்துவத்தையும், கவனத்தையும்
பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...