தமிழக
மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறைபிடிக்கும் இலங்கை அரசின்
நடவடிக்கைக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும்,
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதியை அந்த
திட்டம் முடியும் வரை முழுமையாக வழங்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில்
தமிழகத்தில் உள்ள 1500 ஆசிரியர் பயிற்றுநர்களை பள்ளிகளுக்கு மாற்ற
வேண்டும். அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் அரசு விலையில்லா
மடிக்கணினி வழங்க வேண்டும். ஆசியர்களுக்கு உள்ளதைப் போலவே ஆசிரியர்
பயிற்றுநர்களுக்கும் மாதந்தோறும் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்பன
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின்
மாவட்டத் தலைவர் பி. விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநில
துணைத் தலைவர் பி. பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.
செல்வக்குமார், மாவட்டப் பொருளர் எம். ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில தலைமை நிலையச் செயலர் கே. வேலுச்சாமி
தீர்மானங்களை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறைபிடிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ReplyDeleteஅனைத்து வளமைய் ஆசிரியர்கள் அரசு பணியிலுள்ளவர்கள். அரசின் கோட் ஆப் காண்டெக்ட்(Govt.servert rule Code of Conduct) நன்னடத்தை விதிகளின் படி இவர்களை உடனடியாக இடை நீக்கம் செய்யலாம். அதுவும் வெளிப்படையாக தளத்தில் எழுதிய் தீர்மானம் பதிவு செய்யப்பட்டதால் அரசு விதிமுறைகளை மீறிய செயலாகும். பார்த்து சரி செய்து கொள்ளுங்கள் ஆசிரியர்களே.