மனப்பாடம் மூலம் படிப்பதில் சிரமப்படும் சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, இந்த 2014ம் ஆண்டில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.
அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கும்
விதமாக, பார்முலாக்களைக் கொண்ட load papers -ஐ கொண்டுவர CBSE திட்டமிட்டு
வருகிறது. மாணவர்கள் வெறுமனே மனப்பாடம் செய்து படித்து தேர்வெழுதும்
பழக்கத்தை தகர்க்கும் ஒரு முயற்சியாக, மேற்கண்ட கேள்வித்தாள்
சீர்திருத்தத்தை CBSE கொண்டு வந்துள்ளது.
தனது கேள்வித்தாள் சீர்திருத்த நடவடிக்கையின்
ஒரு பகுதியாக, கடந்த கல்வியாண்டில், 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு Open
Text - based Assessment -ஐ சி.பி.எஸ்.இ., அறிமுகப்படுத்தியது. தற்போது
இந்த 2014 - 15ம் கல்வியாண்டில் அத்திட்டத்தை 10 மற்றும் பிளஸ் 2
வகுப்புகளுக்கும் அறிமுகப்படுத்துகிறது.
இத்திட்டத்திற்காக, ஒரு குழுவிற்கு 2 முதல் 3
நிபுணர்களைக் கொண்ட, பாடங்களுக்கான கமிட்டிகளை CBSE அமைத்துள்ளது.
கேள்வித்தாள்கள் அப்ளிகேஷன்(பயன்பாட்டு) அடிப்படையில் இருக்கும். இதன்மூலம்
மாணவர்கள், பார்முலாக்களை விளக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட மாட்டார்கள்.
நிபுணர் கமிட்டிகள் தமது ஆலோசனைகளை வரும்
2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, வரும் கல்வியாண்டில் புதிய முறையை CBSE அறிமுகப்படுத்தும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...