Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுமூலம் புதிதாக ஆயிரம் வி.ஏ.ஓ.க்கள் பணியிடம் நிரப்பப்படுகிறது பொங்கலுக்குப்பிறகு அறிவிப்பு வெளியாகும்


         கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) 1,000 பேர்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிதாக தேர்வு நடத்தி நியமிக்கிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழ்நாட்டில் துணை கலெக்டர், வணிகவரி உதவி ஆணையர், துணைபோலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பலவகையான குரூப்–1 அதிகாரிகள், குரூப்–2 அலுவலர்கள் தேர்வு, குரூப்–4 மூலம் இளநிலை உதவியாளர் பணியாளர்கள் தேர்வு, கிராம நிர்வாக அலுவலர்(வி.ஏ.ஓ.) உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள், பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

அதிகாரிகள்

தற்போது குரூப்–1 தேர்வு விடைத்தாள்கள் முதல் முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டது. 2–வது கட்டமாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.

குரூப்–4 தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. தேர்வு முடிவுகளை ஒவ்வொன்றாக வெளியிடவும், அதன்பின்னர் சான்றிதழ் சரிபார்த்தல் நடத்தி பணிகளில் அமர்த்தவும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன், செயலாளர் விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை எப்போது வெளியிடும்? என்று அதிகாரி ஒருவரை கேட்டதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:–

1,000 கிராம நிர்வாக அலுவலர்கள்

கிராம நிர்வாக அலுவலர்கள் பணிகள் எவ்வளவு காலியாக உள்ளன என்ற விவரத்தை சேகரித்து வருகிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்த உள்ளோம். அதற்காக முதல் கட்டமாக ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியாகும். அப்போதுதான் எத்தனை பணியிடங்கள் என்ற விவரம் சரியாக தெரியும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருந்தால் அதுவே தகுதியாகும். ஆனால் கடந்த கால தேர்வுகளை பார்த்தபோது பெரும்பாலானவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள். சிலர் பி.இ. படித்துவிட்டு கூட கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!