கடந்த 4 மாதங்களாக சத்துணவு மையங்களுக்கு,
காய்கறி, மசாலா வாங்குவதற்கான மானியம் வழங்கப்படவில்லை. சத்துணவு
அமைப்பாளர்கள் 'கடன்' வாங்கி, நிலைமையை சமாளித்து வருகின்றனர்.பள்ளி
குழந்தைகளுக்கு, மதிய உணவு திட்டத்தை மறைந்த முதல்வர் காமராஜரும், சத்துணவு
திட்டத்தை மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரும் கொண்டு வந்தனர்.
இத்திட்டம் பொதுமக்கள்டையே
வரவேற்பை பெற்றது.இத்திட்டத்தில்,1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும்
குழந்தைகளுக்கு, தினமும் 69.50 பைசாவும், 6 முதல் 10 ம் வகுப்பு வரை
படிப்பவர்களுக்கு தினமும் 79.50 பைசாவும், காய்கறிக்கு 32 பைசாவும்,
மசாலாவுக்கு 13.50 பைசாவும், விறகுக்கு 24 பைசாவும் தரப்படுகிறது.
இந்த பணத்தில், காய்கறி, மசாலா, விறகு வாங்க
முடியாமல் சத்துணவு அமைப்பாளர்கள் திணறி வருகிறார்கள். இந்த குறைந்தளவு
பணமும் கடந்த 4 மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால், சத்துணவு
அமைப்பாளர்கள், 'கடன்' வாங்கி, நிலைமையை சமாளித்து வருகின்றனர்.சத்துணவு
அமைப்பாளர்கள் சங்க மாநில செயலாளர் பேயத்தேவன் கூறுகையில், ''சத்துணவு
மையங்களுக்கு 4 மாதங்களாக மானியம் வழங்காததால், அமைப்பாளர்கள் திணறி
வருகின்றனர். கொடுப்பதே பற்றாக்குறையாக இருக்கும் நிலையில், அதையும் 4
மாதங்களாக நிறுத்தினால், எப்படி சத்துணவு மையங்களை நடத்த முடியும்,''
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...