ஆசிரியப்பணியானது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய
பரிமாணங்களைப் பெற்று வந்துகொண்டிருக்கிறது. புதிய புதிய தொழில்நுட்பங்கள்
அறிமுகமாகும்பொழுது, அவை கற்பித்தலிலும் மாற்றங்களை உண்டாக்கும் வகையில்
தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அப்படிப்பட்ட தொழில்நுட்பங்களில்
முக்கியமானதும், அவசியமானதுமான தொழில்நுட்பமாக இணையதளம் விளங்குகிறது.
சாதாரண வகுப்பறையில் ஆசிரியர் ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்து
சென்ற பின்னர், மீண்டும் அதே பாடத்தை அறிய விரும்பினால் அது சற்று கடினமான
செயலாக மாறிவிடுகிறது. ஆனால் இணையவழிக் கற்றல் முறையில் இது எளிதான செயல்.
ஏனெனில், ஒரு முறை ஆசிரியரால் எடுக்கப்பட்டப் பாடம் இணையத்திலேயோ அல்லது
கணினியிலோ சேமித்து வைக்கப்பட்டிருக்கும், இந்த முறை மூலம் எத்தனை முறை
மற்றும் எப்பொழுது வேண்டுமானாலும் குறிப்பிட்ட பாடத்திற்கான காணொளி
காட்சியைப் பார்த்து அறிந்து கொள்ளலாம்.
மேலும், உலகின் எந்த மூலையிலிருக்கும் மாணவருக்கும், எந்த
நேரத்திலும் கற்றுக்கொடுக்க முடிவது இதன் சிறப்பம்சமாகும். நேரடி காணொளி
மென்பொருட்கள் மற்றும் உரையாடல் வசதியை தரும் இணையதளங்கள் மூலமாக மாணவர்கள்
தங்கள் சந்தேகங்களை கேட்க முடியும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் உள்ள
மாணவர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்த இணையவழிக் கற்றல் முறை இன்று
உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
தேவையான கல்வித்தகுதி
பள்ளி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு இளநிலையில் பி.எட். மற்றும் முதுநிலையில் எம்.எட். படித்திருக்க வேண்டும்.
கல்லூரி மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதற்கு "நெட்" தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும் அல்லது பிஎச்.டி. முடித்திருக்க வேண்டும்.
இவை தவிர சிறப்புப் பாடங்கள், இசை, நடனம், வடிவமைப்பு
போன்றவை சார்ந்த குறுகிய காலப் படிப்புகளுக்கு அந்த அந்தத் துறையில்
சிறப்பான ஆற்றலை பெற்றிருப்பது அவசியம்.
இணையதளமானது கற்றலுக்கான தேடலை எளிதாக்கியுள்ளது.
ReplyDeleteVettilirunthe padichikalam govt ku selavu micham. Ethuthan ulakam ullankail enpatha
ReplyDelete