Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எக்சல் எக்ஸ்பர்ட்டா நீங்கள்? சொல்லுங்கள்!எக்சல் தப்பா கணக்கு போடுமா?



கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள்.
 
           கணினி பயன்படுத்துவோர் அனைவருக்கும்  அலுவலகப் பயன்பாடான Microsoft Office Excel, Word பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை வருவதுண்டு.
 
           எக்சல்லை புதிதாக பயன்படுத்துவோருக்கு இந்தப் பதிவு உதவக் கூடும். வழக்கமாக என் வலைப பக்கம் வருபவர்களுக்கு இவை பற்றி தெரியும் என்பதால் அவர்களிடமிருந்து வரவேற்பு இருக்காது என்றாலும்  இது போன்ற பதிவுகளை புதியவர்கள் பலர் படிப்பதை அறிய முடிகிறது. 
          நான் முறையாக இவற்றை கற்கவில்லை எனினும் பயன்படுத்தும்போது அறிந்தவற்றை என்னைப்போல் உள்ளவர்களுக்கு உபயோகப்படும் என்ற நோக்கத்தில் கற்றுக்  குட்டியின் கணினிக் குறிப்புகள் என்ற தலைப்பில் எழுதி வருகிறேன். இது சம்பந்தமான மாதிரிக் கோப்புகளையும் டவுன் லோட் செய்யும் வகையில் உருவாக்கி இணைத்திருக்கிறேன். இவற்றை 2000 க்கும் மேற்பட்டவர்கள் படித்துள்ளதோடு  தினந்தோறும் யாரேனும் ஒருவராவது டவுன்லோட் செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவை தந்த  தைரியத்தின் அடிப்படையில்தான் இந்தப் பதிவையும் பகிர்கிறேன். அறிந்தவர்கள் பொறுத்தருள்க.  
 
           பள்ளிகள் அலுவலகங்களில் பல்வேறு கணக்கீடுகளுக்கு எக்சல்தான் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. முன்பெல்லாம் கால்குலேட்டரில் மாங்கு மாங்கென்று கஷ்டப்பட்டு போட்ட கணக்கீடுகளை எக்சல் எளிதில் செய்து விடுகிறது. அலுவலகங்களில் வோர்டில் எளிதாக வேலை செய்வார்கள். ஆனால் எக்சல் என்றதும் தயக்கம் காட்டுவார்கள். அதில் உள்ள கட்டங்கள் அவர்களை பயமுறுத்தி விடும்.  எக்சல் மூலம் எளிதில் செய்யவேண்டிய வற்றை வோர்டில் டேபிள் போட்டு டைப் அடித்துக் கொண்டிருப்பார்கள். பல DTP சென்டர்களிலும் எக்சலில் பிரிண்ட் எடுப்பதற்கும் திருத்தம் செய்வதற்கும் அதிக பணம் வாங்குவார்கள்.

              எனக்குத் தெரிந்தடைப்பிஸ்ட் ஒருவர் வோர்டில் விரைவாக தமிழிலும் ஆங்கிலத்திலும் தட்டச்சு செய்யும் திறன் படைத்தவர்.ஆனால் எக்சல் என்றால் ஒதுங்கி விடுவார். தலைமை அலுவலகத்திலிருந்து தகவல்கள் கேட்கும்போது பல சமயங்களில் எக்சல் படிவத்தில்தான் அனுப்ப வேண்டும் என்று கேட்பார்கள். அப்போது மட்டுமே வேண்டா வெறுப்பாக எக்சல் பயன்படுத்துவார் .
   
               அப்படி  ஒருமுறை வேலை செய்ய நேரும்போது கணக்கீடுகளை அதிலேயே பார்முலா மூலம் செய்யாமல் கால்குலேட்டர் மூலம் செய்து அதை எடுத்து உள்ளீடு செய்து கொண்டிருந்தார். ஈசியாக செய்வதை விட்டுவிட்டு ஏன் இப்படி கஷ்டப்பட்டு செய்கிறீர்கள்? எக்சல் உருவாக்கப் பட்டதன் நோக்கமே வீணாகிறதே என்றேன். எக்சல்ல சில சமயம் தப்பாகி விடுகிறது என்பார். 
 
அந்த மாதிரி ஆக வாய்ப்பில்லையே என்றேன்.
நான் காண்பிக்கிறேன் பாருங்க என்றார். அவர் காண்பித்தது கீழே.


DAகாலத்தின் கூடுதலும் (=sum(D2:D3 பயன்படுத்தப் பட்டுள்ளது) Total காலத்தின் கூடுதலும் (=sum(E2:E3) பயன்படுத்தப் பட்டுள்ளது) தவறாக உள்ளதே பாருங்கள் என்றார். இதை Formula பயன் படுத்தி போடப்பட்டதுதானே ஏன் தவறாக உள்ளது என்றார். அதனால் நான் இதை நம்புவதில்லை. சாதரணமாக டோட்டல் போட்டால் சரியாக வந்துவிடுகிறது ஆனால் சதவீதம் போன்றவற்றை பயன்படுத்திய பின் கூடுதல் செய்யும்போது சில சமயங்களில் சரியாகவும் சில சமயங்களில் தவறாகவும் வருகிறதே என்றார் .


           DA கணக்கிட PAY இல இருந்து 91% சதவீத அறிய  அதனோடு =C2*91% என்ற பார்முலா பயன்படுத்தப் பட்டுள்ளது . இரண்டாவது நபருக்கான DA வும் அவ்வாறே கணக்கிடப் பட்டுள்ளது.
 
          DA கண்டறிய FORMULA பயன் படுத்தாமல் தனியாக கணக்கிட்டு 14232, மற்றும் 20666 ஐ உள்ளீடு செய்தால் விடை சரியாக வருவதை காணலாம்.  இது ஏன்? எக்ஸல் ஏன் தவறாக கணக்கிடுகிறது. உண்மையில் அது தவறுதானா? சரியாக வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? நீங்கள் அறிந்தால் சொல்லலாம். 




6 Comments:

  1. இந்த பிரச்சனை சாதாரண ஒன்று இதை சாிசெய்ய தொடா்பு கொள்ள தனேஷ்குமாா் - 9751795612

    ReplyDelete
  2. இந்த பிரச்சனைக்கு தொடா்பு கொள்ளுங்கள் 9751795612

    ReplyDelete
  3. Use This Formula

    =round(c2*91%,0)

    ReplyDelete
  4. formula:
    =round(c2*91%,0)

    ReplyDelete
  5. This is caused by approximation (rounding off of digits after decimal point). When rounded off values are used in another formula, the formula takes the original value instead of rounded off value. This is not an error actually. However if you want the displayed values get added instead of original values, you may use formula given in the earlier comment. But beware, the original value is permanently lost.

    ReplyDelete
  6. just u put which cell may be counted for DA =(C2*91%,0)(c2 is sample ) just try
    LOUIS ,THANDARAMPET

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive