நல்லொழுக்க வகுப்பு புறக்கணிக்கப்பட்டு
வருவதால் பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை
நிலவுகிறது என முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வேதனை தெரிவித்துள்ளது.
மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது:
"திருப்புவனம் பள்ளி ஆசிரியர் பைரவரத்தினம் மாணவரால் தாக்கப்பட்டுள்ளார்.
இதை முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. இது போன்ற
சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு பணியிடத்தில் ஆசிரியர்களுக்கு
போதுமான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கையை மாவட்ட கல்வி அலுவலகம்
மேற்கொள்ள வேண்டும்.
நல்லொழுக்க வகுப்பு புறந்தள்ளப்பட்டு முழு
தேர்ச்சி பெற வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு கல்வித்துறை
செயல்படுவதால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை
தடுக்க மாணவர்களுக்கு நல்ல மதிப்பீடு வழங்கும் முறையை பள்ளிக் கல்வித்துறை
மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...