வேலைவாய்ப்பு பயிற்சி துறை(பயிற்சி பிரிவு) இணை இயக்குநரால்
அறிவிக்கப்பட்டுள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணிக் காலியிடத்திற்கு
தகுதியானவர்களின் பதிவு மூப்பு விவரம் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காலியிடத்திற்கு கல்வித் தகுதியாக டிப்ளமோ என்ஜினியங்கில்
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், பிரிண்டிங் டெக்னாலஜி, இன்ஸ்ட்ரூமென்டேசன்
கன்ட்ரோல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ்
கம்யூனிகேசன், கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் ஆகிய
பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவு மூப்பு விவரம்: இதில் டிப்ளமோ என்ஜினியரிங்கில் மெக்கானிக்கல்,
ஆட்டோமொபைல் முடித்த பொது பிரிவினர்-26.2.1988 வரையும், பெண்கள்-
13.12.1999 வரையும் இருக்க வேண்டும். பிரிண்டிங் டெக்னாலஜி முடித்த
முன்னுரிமை பிரிவினர் அனைவருக்கும் நடப்பு தேதி வரையிலும், மிகவும்
பிற்பட்ட வகுப்பினர்-11.8.2000 வரையும், இன்ஸ்ட்ரூமென்டேசன்-கன்ட்ரோல்
முடித்த பிற்பட்ட வகுப்பினர்-15.5.1989 வரையும், எலெக்ட்ரிக்கல் மற்றும்
எலெக்ட்ரானிக்ஸ் முடித்த அனைத்து பிரிவினர்-31.10.1985 வரையும்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் கலப்பு திருமணம் புரிந்தோர்-20.4.1998
வரையும், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் முடித்த அனைத்து
பிரிவினர்-8.12.1989 வரையும், கணிப்பொறி அறிவியல் மற்றும் தகவல் தொழில்
நுட்பம் முடித்த அனைத்து பிரிவினர்-8.12.1989 வரையும், இந்து ஆதிதிராவிடர்
கலப்பு திருமணம் புரிந்தவர்கள்-22.6.2004 வரையிலும் இருக்க வேண்டும்.
எனவே மேற்குறிப்பிட்ட தகுதிகளை பதிவு செய்துள்ளவர்கள் தகுதிச்
சான்றிதழ்களுடன் வருகிற-2ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு
வந்து சரிபார்த்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட நாளுக்கு பின்
வருகின்றவர்களின் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது என
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமலைச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.
நன்றி : தினமணி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...