சமூக பாதுகாப்புத் திட்டங்கள் இயக்குநர்
மற்றும் முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி ஆகிய இரண்டு பணியிடங்கள்
ஐ.ஏ.எஸ். அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டு இரண்டு பேருக்கு பணியிடங்கள்
வழங்கப்பட்டுள்ளன.
இந்த இரு பணியிடங்களும் ஒரு ஆண்டு அல்லது தேவைக்கேற்ப
ஐ.ஏ.எஸ். அதிகாரி அந்தஸ்து நிலைக்கு உயர்த்தப்பட்டிருக்கும் என தமிழக அரசு
தெரிவித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த குரூப் 1 தொகுதி
அதிகாரிகள் பத்து பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி குடியரசுத் தலைவர்
பிரணாப் முகர்ஜி அண்மையில் உத்தரவிட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து, பத்து
பேருக்கும் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தமிழக தலைமைச் செயலாளர் ஷீலா
பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு
வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):
எஸ்.மலர்விழி-சமூக பாதுகாப்புத் திட்டங்கள்
இயக்குநர், வருவாய் நிர்வாக ஆணையாளர்-பேரிடர் மேலாண்மை (மோகனூரிலுள்ள சேலம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாக இயக்குநர்)
எஸ்.பழனிசாமி-பள்ளிக் கல்வித் துறை துணைச் செயலாளர் (கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலர்)
எஸ்.பிரபாகரன்-பட்டுப்புழு வளர்ப்புத் துறை இயக்குநர், சேலம் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மூத்த மண்டல மேலாளர்)
கே.எஸ்.கந்தசாமி-நில நிர்வாக இணை ஆணையாளர் (டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர்)
சி.கதிரவன்-வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் (சேலம் மாவட்ட ஆவின் பொது மேலாளர்)
எப்.இன்னொசென்ட் திவ்யா-முதல்வரின் தனிப்பிரிவு
சிறப்பு அதிகாரி (இப்போதும் இதே பணியிடத்தில் பணிபுரிகிறார்-தனிப்பிரிவு
சிறப்பு அதிகாரி பொறுப்பு ஐ.ஏ.எஸ். நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதால் அதே
பணியிடத்தில் தொடர்கிறார்.)
எஸ்.சுரேஷ்குமார்-தமிழ்நாடு நீர்வடி மேலாண்மை முகமையின் செயல் இயக்குநர் (தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர்)
எம்.லட்சுமி-சென்னை மாநகராட்சி (வடக்கு) மண்டல துணை ஆணையாளர் (சென்னை மாநகராட்சி உதவி ஆணையாளர்)
ஆர்.கஜலட்சுமி-ஆவின் நிறுவனத்தின் இணை நிர்வாக
இயக்குநர் (ஆவின் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் பதவி ஐ.ஏ.எஸ்.
அதிகாரி அந்தஸ்துக்கு இணையானது என்பதால் அதே பணியிடத்தில் தொடர்கிறார்.
எஸ்.கணேஷ்-தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிநீரகற்று வாரியத்தின் இணை நிர்வாக இயக்குநர் (ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர்)
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...