தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், சுற்றுச்சூழல் மன்றம் நடத்த,மாவட்டத்திற்கு தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 80 லட்சம் ருபாய்ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும்,
சுற்றுச்சூழல் மன்றம் நடத்த, தலா 100 பள்ளிகள் (உயர்நிலை மேல்நிலை) ஏற்கனவே
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இதில் ஒவ்வொரு பள்ளியிலும், தலா 50 மாணவர்கள்
உள்ளனர். இவர்களுக்கு,பசுமை தினம் கொண்டாடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு,
மழைநீர் சேகரிப்பு, புகையிலை இல்லாத பள்ளி வளாகத்தை உருவாக்குதல்,
மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி போட்டிகள் நடத்தி,
ஒருங்கிணைப்பாளர்கள்,விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக,
மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றனர். இதற்கான செலவுகளுக்கு தலா ஒரு
பள்ளிக்கு 2,500 ரூபாய் என, ஒவ்வொரு மாவட்டத்துக்கும், தலா 2.50
லட்சம்ரூபாய் வீதம், 32 மாவட்டத்திற்கு 80 லட்சம் ரூபாய் காசோலையை , பள்ளி
கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...