ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மையத்தில் யாருமே வருகை தரவில்லை,
அலுவலர்கள் மட்டும் 8 மணி நேரம் காத்திருந்துவிட்டு திரும்பினர். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 20ம் தேதிமுதல் 27ம் தேதி வரை 32 மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் பங்கேற்காதவர்களுக்கும், கடந்த 2012ல் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.சான்றிதழ் சரி பார்க்க அழைக்கப்பட்டு அப்போது வராதவர்களும் தேர்வு எழுதிய மாவட்டங்களில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் சென்று கலந்து கொள்ளலாம் என்றும், இதுவே கடைசி வாய்ப¢பாகும். இனிஎந்த வாய்ப்பும் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.குமரி மாவட்டத்தில் முதல்தாள் தேர்வில் அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டனர்.
2ம் தாளில் 347 பேருக்கு 341 பேர் மட்டும் கலந்துகொண்டனர். 6 பேர் கலந்துகொள்ளவில்லை.இதனை போன்று 2012 தேர்வில் வெற்றிபெற்ற சிலரும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாமல் விடுபட்டிருந்தனர். நேற்று சான்றிதழ் சரிபார்ப்புக்காக நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள மையத்தில் காலை 9 மணி முதல் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் தேர்வர்கள் யாரும் வருகை தராததால் மாலை5 மணி வரை காத்திருந்துவிட்டு அலுவலர்கள் திரும்பி சென்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...