Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட்

      ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. 

        இந்த ராக்கெட் இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட, கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டதாகும். தகவல் தொடர்பு சேவைக்காக, 1982 கிலோ எடை கொண்ட ஜி சாட்-14 என்ற செயற்கைக் கோளுடன் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் கடந்த ஆகஸ்ட் மாதம் விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது.
          கடைசி நேரத்தில் ராக்கெட்டின் இரண்டாவது நிலையில் உள்ள என்ஜின் பகுதியில் திரவ எரிபொருள் கசிந்தது. இதனால், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜி.எஸ்.எல்.வி. டி.-5 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, 29 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று காலை 11.18 மணி முதல் தொடங்கியது. அந்த கவுன்ட் டவுன் முடிவடைந்த நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை 4.18 நிமிடத்திற்கு ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive