பள்ளிகளுக்குச் செல்லாத 43 ஆயிரம் குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வித் திட்டத்தில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளதாக ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா ஆற்றிய உரை:
பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், கலர் பென்சில்கள், வண்ண சீருடைகள், மிதிவண்டிகள், மதிய உணவு, லேப்டாப், இடைநிற்றலைக் குறைப்பதற்கான ஊக்கத் தொகை போன்ற பல்வேறு திட்டங்களின் காரணமாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது.பள்ளிகளில் பயிலாதவர்கள் 51,447 குழந்தைகளில் இந்த ஆண்டு 43,838குழந்தைகள் முறையான பள்ளிக் கல்வி முறை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தொலைதூர கிராமங்கள் மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் வசிக்கும் மாணவர்கள்பள்ளிகளுக்கு வர சிறப்பு பயண வசதிகள் வழங்குதல், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது போன்ற பதுமையான முயற்சிகளின் மூலமாகவே இதனை எட்ட முடிந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...