தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி சுருக்கெழுத்து தட்டச்சர், நிலை 3 பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி நடந்தது.
சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிகளுக்கான மீதம் உள்ள காலிப்
பணியிடங்களில் 165 இடங்களுக்கு 3ம்கட்ட சான்று சரிபார்ப்பு மற்றும் துறை
ஒதுக்கீடு பிப்ரவரி 3, 4ம் தேதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய
அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கவுன்சலிங் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தவிர அழைப்புக் கடிதங்களும் தபால் மூலம்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்வுக்காக கணினி மூலம் விண்ணப்பிக்கும்போது 10ம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி வகுப்பை தமிழ் வழியில் படித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று வாங்கி வர வேண்டும். தேர்ச்சி பெற்றுள்ள 165 பேரில் 3ம் தேதி நடக்கும் கவுன்சலிங்கிற்கு வர இயலாமை, பணியில் சேர இயலாமை, ஏதாவது காரணத்துக்காக விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளாதது ஆகியவற்றால் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப 87 பேரின் எண்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் அப்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப 4ம் தேதி நடக்கும் கவுன்சலிங்கில் அனுமதிக்கப்படுவார்கள்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...