"பிளஸ் 2 தேர்வுக்கான மாணவர்கள் பதிவெண்
பட்டியல்களை தலைமையாசிரியர்கள் சரிபார்த்து ஜன.,23க்குள் கல்வி மாவட்ட
"நோடல்" மையங்களில் ஒப்படைக்க வேண்டும்" என, மதுரை முதன்மை கல்வி அலுவலர்
அமுதவல்லி தெரிவித்தார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: இப்பட்டியல் ஜன.,17ல் பள்ளிக் கல்வி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் மாவட்டம் வாரியாக அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட "பயனர் பெயர்" மற்றும் "கடவுச்சொல்" மூலம் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்கள் பட்டியலை தலைமையாசிரியர்கள் பதிவிறக்கம் செய்து, பெயர், பதிவெண் உட்பட பட்டியலில் உள்ள விவரங்களை சரிபார்க்கும் பணி நடக்கிறது. மாணவர் பட்டியலை பதிவிறக்கம் செய்ய இன்று (ஜன.,20) கடைசி நாள்.
சரிபார்க்கப்பட்ட பட்டியலை ஜன.,23க்குள் கல்வி
மாவட்ட நோடல் மையங்களான சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (மதுரை ),
ஒத்தக்கடை பெண்கள் மேல்நிலைப் பள்ளி (மேலூர்), உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்
பள்ளி (உசிலம்பட்டி) ஆகியவற்றில் ஒப்படைக்க வேண்டும்.
மேலும் பத்தாம் வகுப்பிற்கான (தமிழ் தவிர பிற
மொழிப் பாட மாணவர்கள்) தேர்வுக் கட்டணம் மற்றும் மதிப்பெண் பட்டியலுக்கான
கட்டணம் ஜன.,23க்குள் வங்கிகளில் செலுத்தி அதற்கான ரசீதை சம்பந்தப்பட்ட
கல்வி அலுவலர்களிடம் ஜன.,24க்குள் ஒப்படைக்க வேண்டும், என
தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...