Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வாகை சூட வாழ்த்துவோம்! - சிறப்புக்கட்டுரை 2

பாடப்பகுதி குறிப்புகள் - 2வது வாரம்

தமிழ்

பகுதி I: 20-01-2014 முதல் 31-01-2014 வரை

01. படிவங்கள் நிரப்புதல் [வங்கிக்கணக்கில் பணம் செலுத்து படிவம் (84), வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கும் படிவம் (146), தொடர் வண்டி இருக்கை முன்பதிவுப் படிவம் (228)]
02. கொடுக்கப்பட்ட பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் (31, 83, 102, 172)
03. அரபு எண்களைத் தமிழாக்கம் செய்தல் (29, 55, 83, 102, 125)
04. ஆங்கில உரைநடைப் பகுதியை தமிழாக்கம் செய்தல் [31, 56]
05. ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுதல் [31, 56]
06. கதை / கவிதை எழுதுதல்: கவிதை: தாய், மழைநீர்
07. வாழ்வியல் சூழல் (30, 55)
08. பாடலைப் படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுதல்
09. உரைப்பகுதியைப் படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுதல்
10. செய்யுள்: குறுவினா [பாடம் 1 வாழ்த்து, திருக்குறள், ஏலாதி]
11. உரைநடை: குறுவினா [பாடம் 1 உயர்தனிச் செம்மொழி]
12. செய்யுள்: மனப்பாடப் பகுதி - வாழ்த்து (), திருக்குறள் 5 
13. செய்யுள்: நெடுவினா [பாடம் 2 சிலப்பதிகாரம்]
14. உரைநடை: நெடுவினா [பாடம் 1 உயர்தனிச் செம்மொழி]
15. பலவுள் வினா, கோடிட்ட இடத்தை நிரப்புதல், பொருத்துதல், வினா அமைத்தல் [பாடம் 1]

பகுதி II: 03-02-2014 முதல் 14-02-2014 வரை

01. கொடுக்கப்பட்ட பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் (31, 83, 102, 172)
02. அரபு எண்களைத் தமிழாக்கம் செய்தல் (29, 55, 83, 102, 125)
03. ஆங்கில உரைநடைப் பகுதியை தமிழாக்கம் செய்தல் [85, 103]
04. ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுதல் [85, 103]
05. கதை / கவிதை எழுதுதல்: கவிதை: பள்ளி, முயற்சி
06. வாழ்வியல் சூழல் (85, 103)
07. பாடலைப் படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுதல்
08. உரைப்பகுதியைப் படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுதல்
09. செய்யுள்: குறுவினாக்களுக்கு விடை எழுதுதல் [பாடம் 2 சிலப்பதிகாரம், தமிழ் வளர்ச்சி]
10. உரைநடை: குறுவினா [பாடம் 2 பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்]
11. செய்யுள்: மனப்பாடப் பகுதி - சிலப்பதிகாரம், தமிழ் வளர்ச்சி  
12. செய்யுள்: நெடுவினா [பாடம் 2 சிலப்பதிகாரம்]
13. உரைநடை: நெடுவினா [பாடம் 2 பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள்]
14. பலவுள் வினா, கோடிட்ட இடத்தை நிரப்புதல், பொருத்துதல், வினா அமைத்தல் [பாடம்2]

பகுதி III: 17-02-2014 முதல் 28-02-2014 வரை
01. கொடுக்கப்பட்ட பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் (31, 83, 102, 172)
02. அரபு எண்களைத் தமிழாக்கம் செய்தல் (29, 55, 83, 102, 125)
03. ஆங்கில உரைநடைப் பகுதியை தமிழாக்கம் செய்தல் [126, 147]
04. ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுதல் [126, 147]
05. கதை / கவிதை எழுதுதல்: கவிதை: நட்பு, மழை
06. வாழ்வியல் சூழல் (126, 147)
07. பாடலைப் படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுதல்
08. உரைப்பகுதியைப் படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுதல்
09. செய்யுள்: குறுவினா [பாடம் 3 கம்பராமாயணம்]
10. உரைநடை: குறுவினா [பாடம் 3 அண்ணல் அம்பேத்கர்]
11. செய்யுள்: மனப்பாடப் பகுதி - கம்பராமாயணம்
12. செய்யுள்: நெடுவினா [பாடம் 3 கம்பராமாயணம்]
13. உரைநடை: நெடுவினா [பாடம் 3 அண்ணல் அம்பேத்கர்]
14. பலவுள் வினா, கோடிட்ட இடத்தை நிரப்புதல், பொருத்துதல், வினா அமைத்தல் [பாடம் 3]

பகுதி IV: 03-03-2014 முதல் 13-03-2014 வரை
01. கொடுக்கப்பட்ட பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம் செய்தல் (31, 83, 102, 172)
02. அரபு எண்களைத் தமிழாக்கம் செய்தல் (29, 55, 83, 102, 125)
03. ஆங்கில உரைநடைப் பகுதியை தமிழாக்கம் செய்தல் [172, 201]
04. ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுதல் [172, 201]
05. கதை / கவிதை எழுதுதல்: கவிதை: குழந்தை, மலை
06. வாழ்வியல் சூழல் (171, 201)
07. பாடலைப் படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுதல்
08. உரைப்பகுதியைப் படித்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடை எழுதுதல்
09. செய்யுள்: குறுவினா [பாடம் 4 நற்றிணை, புறநானூறு]
10. உரைநடை: குறுவினா [பாடம் 4 பேச்சுக்கலை]
11. செய்யுள்: மனப்பாடப் பகுதி - திருக்குறள் 10 
12. செய்யுள்: நெடுவினா [பாடம் 7 திருக்குறள்]
13. உரைநடை: நெடுவினா [பாடம் 4 பேச்சுக்கலை]
14. பலவுள் வினா, கோடிட்ட இடத்தை நிரப்புதல், பொருத்துதல், வினா அமைத்தல் [பாடம் 4]

பகுதி V: 14-03-2014 முதல் 24-03-2014 வரை
01. ஆங்கில உரைநடைப் பகுதியை தமிழாக்கம் செய்தல் [229, 246]
02. ஆங்கில பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுதல் [229, 246]
03. கதை / கவிதை எழுதுதல்: கவிதை: கடல், பள்ளி
04. வாழ்வியல் சூழல் (229, 246)
05. செய்யுள்: குறுவினா [பாடம் 5 பெரிய புராணம்]
06. உரைநடை: குறுவினா [பாடம் 5 திரைப்படக்கலை உருவான கலை]
07. செய்யுள்: மனப்பாடப் பகுதி - திருக்குறள் 5 
08. செய்யுள்: நெடுவினா [பாடம் 5 பெரிய புராணம்]
09. உரைநடை: நெடுவினா [பாடம் 5 திரைப்படக்கலை உருவான கலை]
10. பலவுள் வினா, கோடிட்ட இடத்தை நிரப்புதல், பொருத்துதல், வினா அமைத்தல் [பாடம் 5]

ENGLISH
PART I: 20-01-2014 முதல் 31-01-2014 வரை
Poetic devices: Alliteration, rhyming words, rhyming schemes
Abbreviation, Affixes (prefix and suffix), Syllables, Compound words, American English,
English Paper I: Question No.:12 Construct a sentence using one of the following words given below: (a) diminish (b) diminishing (c) diminished. Ask the students to write:
(1) Diminish is an English word. (2) Diminish is not a Tamil word. (3) I know the meaning of the word 'diminish'.
    (4) I don't know the meaning of the word 'diminish'. (5) Do you the meaning of the word 'diminish'?
Writing dialogue and dialogue completion
Punctuation (Capital letter and (I), full stop or ? mark or ! mark
Identity of a character and matching (Sam, Caught Sneezing)
Making notes and summary preparation. Notes: Ask the students to write important words using hyphen (-).
Summary:  Rough copy: Summary:  Fair copy: Given words: 150 Written words: 50
Developing hints:
Rough copy: 
Title & Fair copy: Simple sentences (past tense)
Moral:
Prose: The model millionaire (5 simple questions), Paragraph 5 simple sentences
Poem: Beautiful inside (Paragraph 5 simple sentences)
Memory poem: Manliness (at least 6 lines)
Supplementary Reader: Sam (Paragraph 5 simple sentences)
Advertisement, Error spotting, Road map, Matching Slogans, Expressing ideas about the pictures
PART II: 03-02-2014 முதல் 14-02-2014 வரை
Poetic devices: Alliteration, rhyming words, rhyming schemes
Abbreviation, Affixes (prefix and suffix), Syllables, Compound words, American English,
Homophones, Plural forms, If clause, Sentence pattern, Question tag
Writing dialogue and dialogue completion
Punctuation (Capital letter and (I), full stop or ? mark or ! Mark, comma, quotation marks
Identity of a character and matching (The Piano lesson, The Summer Flight)
Prose: Music - The Hope Raiser (5 simple questions), Paragraph 5 simple sentences
Poem: The piano (Paragraph 5 simple sentences)      Memory poem: Manliness (next 6 lines)
Supplementary Reader: The piano lesson (Paragraph 5 simple sentences)
Advertisement, Error spotting, Road map, Matching Slogans, Expressing ideas about the pictures
PART III: 17-02-2014 முதல் 28-02-2014 வரை
Poetic devices: Alliteration, rhyming words, rhyming schemes
Abbreviation, Affixes (prefix and suffix), Syllables, Compound words, American English, Degrees of comparison, Infinitives and gerunds, Articles, Preposition
Unknown passage comprehension, Supplementary Reader comprehension
Punctuation (Capital letter and (I), full stop or ? mark or ! Mark, comma, quotation marks
Identity of a character and matching (The face of Judas Iscariot, swept away, A close encounter)
Prose: A Golden Path (5 simple questions), Paragraph 5 simple sentences
Poem: Manliness (Paragraph 5 simple sentences)     Memory poem: Going for water (at least 6 lines)
Supplementary Reader: The face of Judas Iscariot (Paragraph 5 simple sentences)
Advertisement, Error spotting, Road map, Matching Slogans, Expressing ideas about the pictures
PART IV: 03-03-2014 முதல் 13-03-2014 வரை
Poetic devices: Alliteration, rhyming words, rhyming schemes and others
Abbreviation, Affixes (prefix and suffix), Syllables, Compound words, American English, Homophones, Plural forms, If clause, Sentence pattern, Question tag, Degrees of comparison, Infinitives and gerunds, Articles, Preposition
Identity of a character and matching (Sam, The piano lesson, The face of Judas Iscariot)
Prose: Will thirst become unquenchable?, Making visible the invisible (5 simple questions)
Memory poem: Going for water (next 6 lines)
Picture Comprehension, Advertisement, Error spotting, Road map, Matching Slogans, Expressing ideas about the pictures
PART V: 14-03-2014 முதல் 24-03-2014 வரை
Poetic devices: Alliteration, rhyming words, rhyming schemes and others
Abbreviation, Affixes (prefix and suffix), Syllables, Compound words, American English, Homophones, Plural forms, If clause, Sentence pattern, Question tag, Degrees of comparison, Infinitives and gerunds, Articles, Preposition
Identity of a character and matching (Swept away, A close encounter, The summer flight, Caught sneezing)
Prose: Flying with the moon on their wings, Our Heritage - A timeless marvel (5 simple questions)
Memory poem: The cry of the children
Picture Comprehension, Advertisement, Error spotting, Road map, Matching Slogans, Expressing ideas about the pictures

கணக்கு
பகுதி I: 20-01-2014 முதல் 31-01-2014 வரை
வரைபடம் வரைதல், தொடுகோடு வரைதல்
வென்படங்கள் வரைதல், கணங்கள்: சேர்ப்பு, வெட்டு, நிரப்பி காணல்
சார்புகள்: மதிப்பகம், வீச்சகம், சார்பு
மீ.பொ.வ. காணல்
நிகழ்தகவு: சோதனைகள் & கூறுவெளிகள்
அணிகள்: வரிசை, கூட்டல்
காரணிப்படுத்துதல், வர்க்கமூலம் காணல், திட்டவிலக்கம் காணல்
கணித அடிப்படை செயல்கள்
வாய்பாடு 1 முதல் 10 வரை மட்டும் போதுமானது.

பகுதி II: 03-02-2014 முதல் 14-02-2014 வரை
வரைபடம் வரைதல், தொடுகோடு வரைதல்
வென்படங்கள் வரைதல், கணங்கள்: சேர்ப்பு, வெட்டு, நிரப்பி காணல், விதிகளை நிறுவுதல்
சார்புகள்: மதிப்பகம், வீச்சகம், சார்பு
மீ.பொ.வ. காணல்
நிகழ்தகவு: சோதனைகள் & கூறுவெளிகள், நிகழ்தகவு காணல்
அணிகள்: வரிசை, கூட்டல், கழித்தல்
காரணிப்படுத்துதல், வர்க்கமூலம் காணல், திட்டவிலக்கம் காணல்
கணித அடிப்படை செயல்கள், வாய்பாடு 1 முதல் 10 வரை மட்டும் போதுமானது.

பகுதி III: 17-02-2014 முதல் 28-02-2014 வரை
வரைபடம் வரைதல், வட்ட நாற்கரம் வரைதல்
வென்படங்கள் வரைதல், கணங்கள்: சேர்ப்பு, வெட்டு, நிரப்பி காணல், விதிகளை நிறுவுதல்
சார்புகள்: மதிப்பகம், வீச்சகம், சார்பு
மீ.பொ.வ. மீ.பொ.ம. காணல்
நிகழ்தகவு: சோதனைகள் & கூறுவெளிகள், நிகழ்தகவு காணல்
அணிகள்: வரிசை, கூட்டல்
காரணிப்படுத்துதல், வர்க்கமூலம் காணல், திட்டவிலக்கம் காணல்
கணித அடிப்படை செயல்கள், வாய்பாடு 1 முதல் 10 வரை மட்டும் போதுமானது.

பகுதி IV: 03-03-2014 முதல் 13-03-2014 வரை
வரைபடம் வரைதல், வட்ட நாற்கரம் வரைதல்
வென்படங்கள் வரைதல், கணங்கள்: சேர்ப்பு, வெட்டு, நிரப்பி காணல், விதிகளை நிறுவுதல்
சார்புகள்: மதிப்பகம், வீச்சகம், சார்பு
மீ.பொ.வ. காணல், மூலங்கள் காணல்
நிகழ்தகவு: சோதனைகள் & கூறுவெளிகள், நிகழ்தகவு காணல்
இயற்கணிதம், அணிகள், பகுமுறை வடிவியல், மாறுபாட்டுக்கெழு காணல், முக்கோணவியல்

பகுதி V: 14-03-2014 முதல் 24-03-2014 வரை
வரைபடம் வரைதல், வட்ட நாற்கரம் வரைதல்
வென்படங்கள் வரைதல், கணங்கள்: சேர்ப்பு, வெட்டு, நிரப்பி காணல், விதிகளை நிறுவுதல்
சார்புகள்: மதிப்பகம், வீச்சகம், சார்பு
இயற்கணிதம், அணிகள், பகுமுறை வடிவியல்
மாறுபாட்டுக்கெழு காணல், நிகழ்தகவு: சோதனைகள் & கூறுவெளிகள், நிகழ்தகவு காணல்

அறிவியல்
பகுதி I: 20-01-2014 முதல் 31-01-2014 வரை
1, 5, 9, 15 ஆகிய பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள்
மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும், செயல்பாடும், தாவரங்களில் இனப்பெருக்கம், பாலூட்டிகள் ஆகியவற்றில் பட வினாக்கள்
மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும், செயல்பாடும், பாலூட்டிகள், கழிவுநீர் மேலாண்மை, கரைசல்கள், மின்னோட்டத்தின் காந்தவிளைவும், ஒளியியலும் பாடங்களில் இரு மதிப்பெண் வினாக்கள்
நோய் தடைக்காப்பு மண்டலம், மின்னோட்டத்தின் காந்தவிளைவும், ஒளியியலும் பாடங்களில் 5 மதிப்பெண் வினாக்கள்
செய்முறைகள்: 1, 2, 5, 6, 9, 10, 13, 14

பகுதி II: 03-02-2014 முதல் 14-02-2014 வரை
2, 6, 10, 16 ஆகிய பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள்
கரைசல்கள், வேதிவினைகள், கார்பனும் அதன் சேர்மங்களும், மின்னோட்டத்தின் காந்த விளைவும் ஒளியியலும் ஆகியவற்றில் படங்கள் மற்றும் அட்டவணைகள்
மரபும் பரிணாமமும்,  வாழ்க்கை இயக்கச் செயல்கள், அணுக்களும் மூலகூறுகளும், விசையும் இயக்க விதிகளும் ஆகிய பாடங்களில் இரு மதிப்பெண் வினாக்கள்
நோய் தடைக்காப்பு மண்டலம், மின்னோட்டத்தின் காந்தவிளைவும், ஒளியியலும் பாடங்களில் 5 மதிப்பெண் வினாக்கள்
செய்முறைகள்: 3, 4, 7, 8, 11, 12, 15, 16

பகுதி III: 17-02-2014 முதல் 28-02-2014 வரை
3, 7, 11, 17 ஆகிய பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள்
மனித உறுப்பு மண்டலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேதிவினைகள், மின்னோட்டவியலும் ஆற்றலும் ஆகியவற்றில் பட வினாக்கள்
மனித உறுப்பு மண்டலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வேதிவினைகள், மின்னோட்டவியலும் ஆற்றலும் பாடங்களில் இரு மதிப்பெண் வினாக்கள்
நோய் தடைக்காப்பு மண்டலம், மின்னோட்டத்தின் காந்தவிளைவும், ஒளியியலும் பாடங்களில் 5 மதிப்பெண் வினாக்கள்

பகுதி IV: 03-03-2014 முதல் 13-03-2014 வரை
4, 8, 12, 13 ஆகிய பாடங்களில் உள்ள ஒரு மதிப்பெண் வினாக்கள்
நோய்தடைக்காப்பு மண்டலம், வாழ்க்கை இயக்கச் செயல்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்னோட்டவியலும் ஆற்றலும், ஆகியவற்றில் பட வினாக்கள்
மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும், செயல்பாடும், பாலூட்டிகள், கழிவுநீர் மேலாண்மை, கரைசல்கள், மின்னோட்டத்தின் காந்தவிளைவும், ஒளியியலும் பாடங்களில் இரு மதிப்பெண் வினாக்கள்
மரபும் பரிணாமமும், விசையும் இயக்க விதிகளும் பாடங்களில் 5 மதிப்பெண் வினாக்கள்

பகுதி V: 14-03-2014 முதல் 24-03-2014 வரை
அனைத்து பாடங்களிலும் உள்ள ஒரு, இரு மதிப்பெண் வினாக்கள், படங்கள், அட்டவணைகள்
மரபும் பரிணாம்மும், விசையும் இயக்க விதிகளும் பாடங்களில் 5 மதிப்பெண் வினாக்கள்

சமூக அறிவியல்

பகுதி I: 20-01-2014 முதல் 31-01-2014 வரை

காலக்கோடு வரைதல்
ஆசியா வரை படம்
இந்தியா வரைபடம்
புவியியலில் முதல் 3 பாடங்களில் புறவயவினா, குறுவினா, வேறுபடுத்துதல் வினா, தலைப்பு வினா, பத்தி வினா

பகுதி II: 03-02-2014 முதல் 14-02-2014 வரை

காலக்கோடு வரைதல்
ஆசியா வரை படம்
இந்தியா வரைபடம்
வரலாற்றில் 1, 2, 3 பாடங்களில் புறவயவினா, குறுவினா, வேறுபடுத்துதல் வினா, தலைப்பு வினா, பத்தி வினா

பகுதி III: 17-02-2014 முதல் 28-02-2014 வரை

காலக்கோடு வரைதல்
ஆசியா வரை படம்
இந்தியா வரைபடம்
பொருளியலில் முதல் 2 பாடங்களில் புறவயவினா, குறுவினா, வேறுபடுத்துதல் வினா, தலைப்பு வினா, பத்தி வினா
வரலாற்றில் 4, 5, 6 பாடங்களில் புறவயவினா, குறுவினா, வேறுபடுத்துதல் வினா, தலைப்பு வினா, பத்தி வினா

பகுதி IV: 03-03-2014 முதல் 13-03-2014 வரை

காலக்கோடு வரைதல்
ஆசியா வரை படம்
இந்தியா வரைபடம்
வரலாற்றில் 7, 8 பாடங்களில் புறவயவினா, குறுவினா, வேறுபடுத்துதல் வினா, தலைப்பு வினா, பத்தி வினா

பகுதி V: 14-03-2014 முதல் 24-03-2014 வரை

காலக்கோடு வரைதல்
ஆசியா வரை படம்
இந்தியா வரைபடம்
குடிமையியலில் 3, புவியியலில் 4, 5 பாடங்களில் புறவயவினா, குறுவினா, வேறுபடுத்துதல் வினா, தலைப்பு வினா, பத்தி வினா

நமது கட்டுரை குறித்த விளக்கம்-

கடையனையும் கடைதேற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வணக்கம்!
                             கடந்த இரு வாரங்களாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடையனையும் கடைதேற்றுவதற்கு (95% தேர்ச்சி விழுக்காடு பெற வைப்பதற்கு) என்னென்னவெல்லாம் செய்யலாம், எப்படியெப்படியெல்லாம் செய்யலாம் என பல கருத்தரங்கங்களும், ஆய்வரங்கங்களும் அரசு மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளாலும் நடத்தப்பெற்றன. அவ்வுயரிய நோக்கத்தை எட்டும் வகையில் ஆசிரியர்களுக்கும், மாணவ மாணவியர்களுக்கும் உதவிடும் வகையில் சிந்தித்ததன் விளைவே இக்கட்டுரை.
   சென்றவை, சென்றவையாகவே இருக்கட்டும்! வளமையான வருங்காலத்தை மட்டுமே நினைவில் வைப்போம்! நமது எண்ணம், சிந்தனை, செயல் எல்லாம் 95% தேர்ச்சி விழுக்காடு குறித்தே இருக்கட்டும். நம்மைக் குறித்த விமர்சனங்கள், கேலி கிண்டல்கள், எள்ளி நகையாடல்கள், தனியார் பள்ளி ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு திட்டமிட்டே செய்யும் சீண்டல்கள், இன்ன பிறவகை தாக்குதல்கள் ஆகியவற்றை ஒட்டு மொத்தமாக புறந்தள்ளுவோம்! சாதிப்போம் வாருங்கள் தோழமை ஆசிரியர்களே!
   பத்தாம் பொதுத்தேர்வுக்கு இன்னும் ஒன்பது வாரங்கள் உள்ளன. குறைந்த பட்சம் 45 வேலை நாட்களே உள்ளன. அதிலும் அலகுத் தேர்வுகள், திருப்புதல் தேர்வுகள் என சில செல்லமான. தேவையான குறுக்கீடுகள். அதையும் மீறி சாதிப்போம். ஒரு செயல் திட்டம் வகுத்துக்கொள்வோம். தலைமையாசிரியர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர்கள் மற்றும் உதவும் எண்ணம் கொண்டவர்கள் உதவியோடு சாதிப்போம். வரும் உதவிகளை வரவில் வைத்து, ஒத்துழைப்பின்மையை ஒதுக்கி வைத்து நமது குறிக்கோளை நோக்கி, நமது செயல் திட்டத்தினைச் செயல்படுத்தி வெற்றி பெறுவோம்.
   நமது செயல் திட்டம் மிக எளிமையானது; சிரமமில்லாததும் கூட. எந்த மாணவரால் (மாணவன் அல்லது மாணவியால்), எந்தெந்த பாடத்தின் மூலம் தேர்ச்சி சதவீதம் குறையும் வாய்ப்புள்ளது என்ற பட்டியலை தயார் செய்து கொள்வாம். நாம் அதை ஏற்கெனவே தயார் செய்து வைத்திருப்போம். அவர்களை, அந்தப் பாடத்தில் ஒரு நாளைக்கு ஒரு மதிப்பெண் எடுக்க வைப்பதே நமது செயல் திட்டம்.
   உங்கள் பள்ளி சூழல், தலைமையாசிரியர், சக ஆசிரியர்கள் ஒத்துழைபிற்கு ஏற்றவாறு செயல் திட்டத்தைச் செயல்படுத்தி வெற்றி வாகை சூட வாழ்த்துகள்.
   மாணவர்களை சிறப்பாக பயில்வோர், ஓரளவு பயில்வோர், நம் ஒத்துழைப்பு தேவைப்படுவோர் என பிரித்துக் கொள்ளுங்கள். சிறப்பாக பயில்வோர் பனை மரத்துக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு நாம் தேவையில்லை. ஓரளவு பயில்வோர் தென்னை மரத்துக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு நம் ஒத்துழைப்பு எப்போதாவது தேவை. மூன்றாம் இனத்தவர் பாக்கு மரத்துக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் நம் ஒத்துழைப்பு தேவை. நாம் இல்லையெனில் அவர்கள் இல்லை. அவர்களே நம் தேர்ச்சி சதவீதத்தினை பதம் பார்ப்பவர்கள். ஒரு வகையில் நம் திரைப்படத்தின் (இலக்கின்) கதாநாயகர்களும் அவர்களே! வில்லன்களும் அவர்களே! என்னே ஒரு முரண்பாடு!
   ஒவ்வொரு நாளும் முதல் 5 பாடவேளைகளை 5 பாடங்களுக்கும் ஒதுக்கியது போக, மதியம் 3 பாட வேளைகள் (தலைமையாசிரியர், சக ஆசிரியர்கள் ஒத்துழைப்போடு) நமக்கு கிடைக்கின்றன. முதல் இரு பிரிவினருக்கு எல்லா பாடங்களிலும் குறிப்பிட்ட பாடப்பகுதியை ஒதுக்கி அதை படிக்குமாறும், பயிற்சி எடுக்குமாறும் பணித்துவிடுங்கள். அவர்களை மேற்பார்வையிட சக ஆசிரியர்கள் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
   மூன்றாம் பிரிவினரை நம்முடன் வைத்துக்கொண்டு, அவர்கள் தேவையை, குறையை, கவனமின்மையைக் கண்டு, அவர்களோடு நாமும் இணைந்து அவர்களுக்கு உதவி, அவர்கள் தேர்ச்சி பெற வழிவகை செய்திடுவோம்.

 Prepared by
Mr. S. RAVIKUMAR,
GRADUATE TEACHER,
GOVT. HIGH SCHOOL,
ARANGALDHURGAM – 635811        PHONE: 9994453649

1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive