Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு.


          ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற 29,528 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (ஜன.20) தொடங்கி வரும் 28-ம்தேதி வரை நடைபெற உள்ளது. 
      இதன்மூலம் 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்புக்காக மாநிலம் முழுவதும் 32 மையங்கள்அமைக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பைக் கண்காணிக்க பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக அத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை:

           "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஆண்டு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான உச் நீதிமன்ற வழக்கு முடிவுக்கு வந்ததையடுத்து, இந்த ஆண்டு இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில்தேர்வு செய்யப்பட உள்ளனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, ஆசிரியர் பட்டயப் படிப்பு, ஆசிரியர்தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பு மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் ஆகியவற்றுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படும்.

கூடுதலாக தேர்ச்சி:

            நீதிமன்ற உத்தரவுப்படி, ஆசிரியர் தகுதித்தேர்வு இரண்டாம் தாளில் 4கேள்விகளுக்கான முக்கிய விடைகள் திருத்தப்பட்டன. அதில் 2 கேள்விகள் நீக்கப்பட்டதோடு, அந்த கேள்விகளுக்கு தலா 1 மதிப்பெண் வழங்கப்பட்டது. மேலும் 2 கேள்விகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் சரியான விடைகளாக அறிவிக்கப்பட்டன. இதனடிப்படையில், விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு திருத்தப்பட்ட தேர்வு முடிவுகள் ஜனவரி 11-ம் தேதி வெளியிடப்பட்டன. திருத்தப்பட்டதேர்வு முடிவுகளில் கூடுதலாக 2,436 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஜனவரி 20 முதல் 28 வரை சான்றிதழ்சரிபார்ப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக, ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17, 18 தேதிகளில்நடைபெற்றது. இந்தத் தேர்வு முடிவுகள் நவம்பர் 5-ம் தேதி வெளியிடப்பட்டன. முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 14,496 பேரும தேர்ச்சி பெற்றனர். இதில் வெளியிடப்பட்ட முக்கிய விடைகளை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் முடிவில் இரண்டாம் தாளில் மட்டும் 4 கேள்விகளுக்கான முக்கிய விடைகளை திருத்தி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், திருத்தப்பட்ட முடிவுகள் வெளியிடப்பட்டு, சான்றிதழ்சரிபார்ப்பும் நடைபெறவுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு மாவட்ட மையங்கள்

Certificate Verification Venue

1.ARIYALUR-Nirmala Girls Hr. Sec.School, Trichy Road, Ariyalur-621704

2.CHENNAI-Govt. Girls Hr.Sec.School, Ashok nagar Chennai-83

3.COIMBATORE-Presentation Girls Hr. Sec. School, Near Head Post Office, Coimbatore¬641001

4.CUDDALORE-St.Joseph Hr.Sec.School Manjakkuppam. Cuddalore-607002

5.DHARMAPURI-Adhiyaman Govt Boys Hr. Sec. School, Dharmapuri-636701

6.DINDIGUL-Our Lady Girls Hr. Sec. School, Madurai Road, Dindugal-624002

7.ERODE-Govt. Girls Hr.Sec.School, Erode-638001

8.KANCHEEPURAM-Pachaiyappa's Hr. Sec. School, Kancheepuram-631501

9.KANYAKUMARI-Sethu Lakshmi Bai(S.L.B) Govt. Hr. Sec. School, Nagerkoil-629001

10.KARUR-Sri Sarada Girls Hr. Sec.School, Pasupathypalayam, Karur-639004

11.KRISHNAGIRI-Govt. Boys. Hr. Sec. School, Krishnagiri-635001

12.MADURAI-OCPM Girls Hr. Sec. School, Thallakulam, Madurai-2

13.NAGAPATTINAM-Natarajan Thamayandhi Hr. Sec. School, Velipalayam, Nagapattinam.

14.NAMAKKAL-Govt. Girls Hr.Sec.School, Namakkal-637001

15.PUDUKKOTTAI-Sree Pragadambal Hr. Sec. School, Pudukkottai-622001

16.PERAMBALUR-Nirmala Girls Hr. Sec. School, Trichy Road, Ariyalur-621704

17.RAMANATHAPURAM-Syed-Ammal Hr. Sec. School, Ramanathapuram-623501

18.SALEM-St.Joseph Girls Hr.Sec.School, Swarnapalayam, Surramangalam Salem ¬636005

19.SIVAGANGAI-Justin Girls Hr. Sec. School, Sivagangai-630561

20.THANJAVUR-St. Antony Hr. Sec. School, Mary's Corner Tanjore

21.THENI-Nadar Boys Hr. Sec. School, Theni

22.THE NILGIRIS-Presentation Girls Hr. Sec. School, Near Head Post Office, Coimbatore¬641001

23.THIRUVALLUR-Perunthalaivar Kamarajar Govt. Girls Hr. Sec. School, Ambattur Thiruvallur Dist. Chennai-600053

24.THOOTHUKUDI-Victoria Girls Hr. Sec. School, Tuticorin-1

25.TIRUCHIRAPALLI-E. R. Hr. Sec. School, Near by Chathiram Bus stand, Trichy-620002

26.TIRUNELVELI-Sara Tukker GirlsHr. Sec. School, Palayamkottai-627002

27.TIRUPPUR-Jaiva Bai Corporation Girls Hr. Sec. School, Tiruppur

28.TIRUVANNAMALAI-Govt. Girls Hr. Sec. School, Polur, Thiruvannamalai

29.TIRUVARUR-V. S Boys Hr. Sec. School, Kamalalayam West Bank, Thiruvarur

30.VELLORE-St.Marys girls Hr.sec school,vellore-1

31.VILLUPURAM-Govt. Girls. Hr. Sec. School, Villupuram-605602

32.VIRUDHUNAGAR-Kshatriya Vidya Sala Boys Hr. Sec. School, No. 107, Kutcheri Road, Virudhunagar-626001




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive